தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: இரக்கமே இல்லாமல் முட்டித்தள்ளிய விஷ்ணு.. உடைந்து நொறுங்கிய அர்ச்சனா.. ரசித்த மாயா கேங்! -

Bigg Boss 7 Tamil: இரக்கமே இல்லாமல் முட்டித்தள்ளிய விஷ்ணு.. உடைந்து நொறுங்கிய அர்ச்சனா.. ரசித்த மாயா கேங்! -

Dec 01, 2023, 10:08 AM IST

google News
விஷ்ணுவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே பயங்கர மோதல் அரங்கேறி இருக்கிறது.
விஷ்ணுவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே பயங்கர மோதல் அரங்கேறி இருக்கிறது.

விஷ்ணுவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே பயங்கர மோதல் அரங்கேறி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக பிக்பாஸ் வீடு மோதல்களால் நிரம்பி வழியும் என்பது அனைவரும் அறிந்ததே..!

அந்த வகையில், இந்த சீசனிலும் ஆரம்பத்தில் இருந்தே மோதல்கள் வெடித்தன. ஜோவிகா - விசித்ராவில் தொடங்கிய மோதல், மாயா - பூர்ணிமா - ஜோவிகா கூட்டணிக்கும் - விசித்ரா அர்ச்சனா கூட்டணிக்கும் இடையே நடந்த மோதலில் பூதாகரமாக வெடித்தது. தற்போது விஷ்ணுவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே நடக்கும் மோதல் பிக்பாஸ் வீட்டை களேபரமாக மாற்றி இருக்கிறது. 

இந்த நிலையில், நேற்றைய தினம் ஷாப்பிங் ரீபேமண்டில் தோற்றதாக சொல்லி, போட்டியாளர்களை ஜோடிகளாக பிரித்து கயிறு வைத்து கட்டினார் பிக்பாஸ். இதில் பிக்பாஸ் வீட்டினுள் எலியும், பூனையுமாக இருக்கக்கூடிய கூல் சுரேஷ் - விசித்ரா, மாயா- மணி, விஷ்ணு - அர்ச்சனா ஆகியோர் ஜோடிகளாக கோர்க்கப்பட்டு கட்டப்பட்டனர். 

இந்த நிலையில் விஷ்ணு அர்ச்சனாவிடம் நீங்கள் எதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள் என்று பேச்சைத் தொடங்க, அர்ச்சனா என்னைப்பற்றி வெளியே வில்லி இமேஜ் இருப்பதாகவும், அதை மாற்றுவதற்காகவும் உள்ளே வந்திருப்பதாக சொன்னார். இதனையடுத்து பேசிய விஷ்ணு, நீங்கள் 2 நாட்கள் என்னிடம் சண்டைப்போட்டதை பார்க்கும் போது வில்லி போன்றுதானே இருந்தது என்றார்.

இதனைக்கேட்ட அர்ச்சனா இல்லை என்று சொல்ல, அப்படியானால் இது என்ன கதாநாயகி சண்டையா? என்று கேட்டார் விஷ்ணு. அதற்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா, நீங்கள் என்னை  அடிப்பேன்னு சொல்லி, கையில் சைகை செய்தீர்கள். அதையெல்லாம் கேட்டுக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது என்றார். இதற்கிடையே வந்த ரவீனா, நீங்க இரண்டு பேரும் தயவு செய்து நண்பர்களாக மாறவேண்டாம். சண்டை போடுங்கள் என்றார். 

இதைக்கேட்டு டென்ஷனான அர்ச்சனா, நான் எமோஷனல் ஆகி உடைவது உங்களுக்கெல்லாம் ஜாலியாக இருக்கிறதா? இது சரியில்லை என்று சாடினார். உடனே, நான் விளையாட்டாகத்தான் சொன்னேன் என்று ரவீனா சொல்ல, சமாதானம் ஆகாத அர்ச்சனா எங்களுக்குள் நடக்கும் சண்டையை நீங்கள் என்ஜாய் செய்தீர்களா? என்று கேட்டார். 

இதைக்கேட்டு கடுப்பான ரவீனா, ஆமாம் என்று சொன்னார். ஒரு கட்டத்தில் எல்லை தாண்டி சென்ற கார சாரமான விவாதத்தில் என்னை வைத்து நீங்கள் கன்டென்ட் செய்கிறீர்கள் என்று அர்ச்சனா சொன்னதுதான் மிச்சம்.. விஷ்ணு இடைவெளியே கொடுக்காமல் வார்த்தை போரை தொடுத்தார். விவாத முடிவில் எமோஷனல் ஆகி உடைந்த அர்ச்சனா, என்னை ஏன் இவருடன் கட்டிப்போட்டீர்கள்.. இப்படி ஒரு விளையாட்டு விளையாட வேண்டும் என்ற அவசியமே இல்லை என்று சொல்லி, கயிறைத்தூக்கிப்போட்டுவிட்டு சென்றார். இதை மாயா, தினேஷ் உள்ளிட்டோர் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி