தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு பொம்பள நடக்குறதுல இருந்து .. பாரதி ராஜா சார் அப்படிதா.. சாப்பிட ரெஸ்டாரண்ட்க்கு போனா கூட' மனம் திறந்த நடிகை ருத்ரா!

ஒரு பொம்பள நடக்குறதுல இருந்து .. பாரதி ராஜா சார் அப்படிதா.. சாப்பிட ரெஸ்டாரண்ட்க்கு போனா கூட' மனம் திறந்த நடிகை ருத்ரா!

Oct 29, 2024, 01:37 PM IST

google News
ராதிகா மேடம் என்னைய பார்த்துட்டு இவங்களா.. எனக்கு சிஸ்டர் மாதிரில இருக்கு.. அப்படின்னாங்க. அப்ப சார் என்ன பார்த்து உனக்கு ஒரு வாரம் சூட்டிங் கிடையாது. அதுக்கு சார் ஒரு வாரம் டைம் தர்றேன் உனக்கு. எப்படியாவது உடம்ப குறைச்சுட்டு சூட்டுக்கு ரெடியாகு அப்படின்னார்.
ராதிகா மேடம் என்னைய பார்த்துட்டு இவங்களா.. எனக்கு சிஸ்டர் மாதிரில இருக்கு.. அப்படின்னாங்க. அப்ப சார் என்ன பார்த்து உனக்கு ஒரு வாரம் சூட்டிங் கிடையாது. அதுக்கு சார் ஒரு வாரம் டைம் தர்றேன் உனக்கு. எப்படியாவது உடம்ப குறைச்சுட்டு சூட்டுக்கு ரெடியாகு அப்படின்னார்.

ராதிகா மேடம் என்னைய பார்த்துட்டு இவங்களா.. எனக்கு சிஸ்டர் மாதிரில இருக்கு.. அப்படின்னாங்க. அப்ப சார் என்ன பார்த்து உனக்கு ஒரு வாரம் சூட்டிங் கிடையாது. அதுக்கு சார் ஒரு வாரம் டைம் தர்றேன் உனக்கு. எப்படியாவது உடம்ப குறைச்சுட்டு சூட்டுக்கு ரெடியாகு அப்படின்னார்.

நடிகை அஸ்வினி ருத்ரா கடந்த சில நாட்களுக்கு முன் Rednool யூடியூப் சேனலின் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஆத்தங்கரை மரமே என்ற பாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். 1993ல் வெளியான படம். நான் பாரதி ராஜா சாரிடம் வேலை செய்த இரண்டாவது படம். புது நெல்லு புது நாத்து முதல் படம். அடுத்து 4 ஆண்டு இடைவெயில் கிழக்குச் சீமையிலே படம் வந்தது.எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது. அப்போது நான் படிப்பை விடவே இல்லை. தனியாக படித்துக்கொண்டிருந்தேன். கிழக்கு சீமையிலே படம் போவதற்கு முன் ஒரு 6 மாதம் வீட்டில் வெட்டியா உட்கார்ந்து இருந்தேன். எக்ஸாம்க்கு படிச்சுட்டு இருந்தேன். அதுனால நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்டு கொழு கொழுன்னு இருந்தேன். அப்போ இந்த படத்தோட வாய்ப்பு வந்தது. லொக்கேஷன் போனோம். அப்போ ஏற்கனவே ராதிகா மேம் எல்லாரும் சூட் பண்ணிட்டு இருந்தாங்க. நான் ஷெட்டுக்கு போன அப்பறம் தான் ராதிகா மேம் கிட்ட முதல் முறையா அறிமுகப்படுத்துறாங்க. இவங்கதா உங்க பொண்ணா நடிக்கப்போறாங்கன்னு சொன்னாங்க. அப்ப ராதிகா மேம் என்ன பார்த்தாங்க.. நிஜமாவே அப்ப ரொம்ப கொழு கொழுன்னு நல்லா புசுக்கு புசுக்குன்னு இருந்தேன் அப்போ.

ராதிகா மேடம் என்னைய பார்த்துட்டு இவங்களா. இவங்கள பார்த்தா எனக்கு சிஸ்டர் மாதிரில இருக்கு.. அப்படின்னாங்க. அப்ப சார் என்ன பார்த்து ஒரே ஒரு வார்த்தை சொன்னாங்க உனக்கு ஒரு வாரம் சூட்டிங் கிடையாது. நா ஏன் சார் அப்படின்னேன்.

அதுக்கு சார் ஒரு வாரம் டைம் தர்றேன் உனக்கு. எப்படியாவது உடம்ப குறைச்சுட்டு சூட்டுக்கு ரெடியாகு அப்படின்னார்.

ரொம்ப டயர்டா இருந்தேன்!

நீங்க நம்ப மாட்டீங்க.. நா ரொம்ப அடமெண்ட்டா சாப்பாடு விசயத்தில் மாறினேன். ஒரு வாரமும் பச்சை கேரட், சப்பாத்தி, தண்ணீர் இது 3 மட்டும் தான் நான் உணவாக சாப்பிட்டேன். என் அம்மாவும் ஹெல்ப் பண்ணாங்க. நிஜமாவே வெயிட் குறைஞ்சதா.. இல்ல குறையலையான்னு தெரில. இல்ல ரொம்ப டயர்டா இருந்தேனா தெரில.. ஆனா ஒரு வாரம் கழிச்சு போனதும்.. இப்ப கரெக்டா இருக்கு வந்து நடி அப்படின்னாங்க..

அந்த படத்தில் பாட்டு வந்து ஒரு 5 நாள் எடுத்திருப்போம். டான்ஸ் மாஸ்டர் எல்லாம் இருந்தாங்க. ஆனா சார் பத்தி தா தெரியும் இல்லையா.. அவரு எல்லாமே ஒரு ஒரு மூவ்மெண்ட் ஒவ்வொரு பார்வை.. ஒவ்வொரு எக்ஸ்பிரசன்ஸ் எல்லாமே சார் சொல்லி கொடுத்ததைத் தான் நானும் விக்னேஷ்ம் பண்ணினோம். அவரு தான் கோரியோ கிராப் பண்ணாருன்னு சொல்லலாம். அதுல இரண்டாவது சரணத்தில் தண்ணில வர்றா மாதிரி பண்ணது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஏன்னா எனக்கு ஆஸ்துமா இருந்தது. அது அருவி தண்ணீன்றதால ரொம்ப ஐஸ் மாதிரி இருக்கும். இப்பல்லாம் இரண்டு நிமிஷம் ஷாட்டுக்கு போயிட்டு ஹீரோயின்ஸ் எல்லாம் வெளியில் வந்ததுடுறாங்க. ஆனா அப்ப எல்லாம் நானும் விக்னேஷூம் ஒரு தடவ தண்ணில இறங்கிட்டோம்னா அங்கயே உட்காந்து இருப்போம்.

ஷாட் இல்லன்னாலும். அதுனால எனக்கு வீசிங் வந்து ஆஸ்துமா பிரச்சனையாகிட்டு அது ஒரு மறக்க முடியாத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்தான். ஆனா இன்னைக்கு வர நா எங்க போனாலும்.. சாப்பிட ஒரு ரெஸ்டாரண்ட்க்கு போனா கூட சில நேரம் நம்ம மூஞ்சிய பார்த்த உடனே வந்து பின்னால பேக்கிரவுண்ட்டுல ஆத்தங்கர மரமே பாட்ட போட ஆரம்பிச்சுடுவாங்க. அப்ப என்னப்பா இன்னும் நியாபகம் வச்சுருக்கீங்களான்னு கேட்டா.. எப்படி மேம் மறக்க முடியும் அப்படின்னு கேட்பாங்க..

வாய்ப்பு கிடைக்கவே இல்ல

அதே போல முதல் படத்துல நடிக்க போனப்ப நா ஒரு ஸ்கூல் கேள். பாரதிராஜா சார் யாருன்னே தெரில. தற்செயலான சூழல்ல தான் நான் முதல் படம் நடிக்க வந்தேன். இந்த சின்ன குழந்தைகள நடிக்க கூப்பிட்டா எப்படி இருக்கும். நான் படிக்குறதுக்கு. புக் எல்லாம் எடுத்துட்டு போனேன். நா பாட்டுக்கு படிப்பேன். அடி வாங்கல.. திட்டு வாங்கல. அதுக்கப்பறம் கிழக்கு சீமையிலேலயும் அப்படிதான்.. அவர் ஒரு டீச்சர். எல்லாருக்குமே ஒரு பொம்பள நடக்குறதுல இருந்து வெட்கப்படுறதுல இருந்து, என்ன எல்லாம் நான் அப்ப பண்ணனோ எல்லாமே அவர் நடிச்சு காட்டிருக்கார். அத நா பாலோ பண்ணேன். அதுக்கப்பறம் எனக்கு அவர் கூட வேலை பாக்க வாய்ப்பு கிடைக்கவே இல்ல.. 25 வருடம் ஆகிடுச்சு அவர பார்த்து. இப்ப அவர படத்துல தா பார்க்குறேன். இன்னைக்கு நான் ஒரு ஆர்ட்டிஸ்டா இருக்கேன்னா அவர் என்ன அறிமுகப்படுத்தியது மட்டும் தான் என்று தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி