வெளியான ஓவியாவின் அந்தரங்க வீடியோ.. சிக்கப்போகும் முக்கியப் புள்ளி.. திரைமறைவு ரகசியங்கள்.. அடித்துச் சொன்ன பயில்வான்
Oct 15, 2024, 03:10 PM IST
வெளியான ஓவியாவின் அந்தரங்க வீடியோ.. சிக்கப்போகும் முக்கியப் புள்ளி.. திரைமறைவு ரகசியங்கள்.. அடித்துச் சொன்ன பயில்வான் ரங்கநாதனின் பேட்டியைப் பார்க்கலாம்.
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ விவகாரத்தில், அதை வெளியிட்ட நபர் குறித்து பயில்வான் ரங்கநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது, ‘’ஓவியாவின் தரப்பில் இருந்து அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் தான்னு சொல்லிடுச்சு. ஆனால், அந்த வீடியோவை வெளியிட்டது பிடிக்கலைங்கிறதுக்காக கேரள சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருக்காங்க.
சமீபத்திய பேட்டியில் என்னுடைய உடலுறவு வீடியோவை செக்ஸ் கல்விக்கு பயன்படுத்துங்கன்னு சொல்லிடுச்சு, ஓவியா. அது வரவேற்கத்தக்க விஷயம். ஏற்கனவே, மூன்று எழுத்து நடிகையின் குளியல் அறை வீடியோ வெளியில் வந்தது. அப்போது, அது நான் இல்லை, அப்படியில்லென சொல்லி சமாளிக்கப் பார்த்தாங்க, கடைசியில் வீடியோ உண்மைதான்னு ஆகிடுச்சு.
இப்போது வெளியான ஓவியாவின் வீடியோவில் வெளிச்சமில்லை என்றாலும் டாட்டூவால், ஓவியா மாட்டிக்கிச்சு. நம்மாளுக, அதைக் கண்டுபிடிச்சு கமெண்டில் போட்டுவிட்டாங்கே. அவங்களும் அதை மறைக்கவில்லை. ஓவியாவின் வீடியோ மாணவர்களுக்குப் பயன்படாது. இல்லறவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமென்றால் பாடமாக இருக்கும்.
முன்பே சூசகமாகப் பேசிய ஓவியா:
இதுக்கு முன்னாடி, ஓவியா கொடுத்த பேட்டியில், நான் வேலையில்லாமல் இருந்தது உண்மை தான். நான் நடிகை. எனக்கு நிறைய செலவு இருக்கு. நான் நிறைய பேர் கூட டேட்டிங் பண்ணுனேன். அது நான் விரும்பி செய்றது தான் அப்படின்னு சொல்லுச்சு. கிளாஸோட போஸ் கொடுக்குறீங்களேன்னு கேட்டால், வர்றவன் தண்ணி அடின்னு சொல்லுவான். நான் தண்ணி அடிக்காம இருக்கமுடியுமா என ஓவியா பதிலளித்தார். இப்போது தான் டேட்டிங், போதைப்பழக்கத்தை எல்லாம் குறைச்சிருக்கேன்னு வெளிப்படையாகச் சொன்னாங்க ஓவியா. இப்படி தமிழ் சினிமாவில் சொன்ன முதல் நடிகை ஓவியா தான்’’ என்று பேசினார் பயில்வான் ரங்கநாதன்.
அதைத்தொடர்ந்து,
’’கேள்வி: சமகால நடிகைகள் இந்த மாதிரி பெயர் கெட்டுப்போனால் வாய்ப்புகள் குறையும்ன்னு நினைப்பாங்க. இவங்க இப்படி சொன்னது பற்றி?
பதில்: எனக்குத் தெரிந்து பிட்டு படத்தில் நடித்த அதிகமான நடிகைகள் அம்மா வேஷம், காமெடி வேஷம் என நிறையவேடங்களில் நடிச்சிருக்காங்க. ஹீரோயின் வேஷம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும் மற்ற நடிகைகள் நடிக்க முடியாத பாத்திரங்கள், ஏற்க முடியாத பாத்திரங்களில் ஓவியாவை நடிக்க வைக்க முயற்சிப்பாங்க.
ஓவியாவுக்கு ஒரு சில கேரக்டர் கிடைக்காமலா போய்விடும். கண்டிப்பாக கிடைக்கும். நிறைய நடிகைகள் இந்த மாதிரி டேட்டிங் மூலம் தான் சம்பாதிக்கிறாங்க. ஆனால், வெளிப்படையாகச் சொல்வதில்லை.
’ஓவியாவுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை’
யாருமே இங்கு கண்ணகி இல்லை அப்படின்னு கண்ணதாசனே பாடியிருக்கிறார். அப்படியிருக்கும்போது ஓவியா வெளிப்படையாக ஒத்துக்கிறாங்க. ஒழுங்காக ஓவியாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தால் ஏன் இப்படி போகுது, சரியாக வாய்ப்புகள் கிடைக்கலன்னு தான் இப்படி போறாங்க.
இப்படி எத்தனை நடிகைகள் சரியான வாய்ப்பு இல்லாமல் தடம் மாறியிருக்காங்க தெரியுமா. பெரிய கோடீஸ்வரருக்கு வைப்பாட்டி ஆகிடுவாங்க, இல்லாட்டி இந்த மாதிரி தொழிலுக்குப்போறாங்க. யார் தடுத்து நிறுத்த முடியும்.
அந்தரங்க படத்தில் நடித்த பின் இயக்குநரை மணமுடித்த நடிகை:
சினிமாவில் மார்க்கெட்டில் இருக்கிற வரை காசு, இல்லையென்றால், அவிழ்த்துப் போட்டால் காசு. ’அவளுடே ராவுகள்’ என்கிற படம் நடிச்சது சீமா, அந்த படத்தோட இயக்குநர் ஐ.வி.சசியை கல்யாணம் முடிக்கலையா. அவங்க மகளே நடிக்கிறாங்க. அது இப்ப வந்து தவறாக எல்லாம் தெரியாது.
சமீபத்தில் ஜெமினி திரைப்பட நடிகை கிரண், போனில் எப்படி வேண்டுமென்றாலும் பேசுவேன். அதற்குப் பணம் என்று சொன்னார். கிரண், அவங்க பாணியில் ஒரு தொழில் பண்றாங்க. ஓவியா இவங்க பாணியில் பண்றாங்க.
எத்தனையோ பேர், நடிகைகளுக்கு ஃபிளாட் எல்லாம் வாங்கிக்கொடுத்து அப்பப்போ போய் ஜாலியாக இருந்துட்டு வருவாங்க. வீடியோ வெளியானதுக்குப் பின்னும், அவங்க வீடியோவுக்கு ஓவியா கமெண்ட் பண்றதால் தான் ‘வீராங்கனை’ என்று ரசிகர்கள் பட்டம் கொடுக்கிறாங்க.
மூன்று வருஷமாக படமே இல்லாதபோதும், இப்போது நடிகை ஓவியாவைப் பற்றி பேசுறாங்க இல்லையா. அது அவங்களுக்கு மார்க்கெட் தானே.
நடிகை ஓவியா, நடிகர் தாரிக்குடன் லிவிங் டூ கெதரில் இருந்திருக்காங்க. ஓவியா அவரை கல்யாணம் செய்ய நினைத்தபோதுதான், தாரிக் இந்த வீடியோவை வெளியிட்டதாக, கேரள காவல் துறையில் நடிகை ஓவியா புகார் கொடுத்திருக்காங்க. அதனால், அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியாவும் தாரிக்கும் தான்'எனச் சொல்லி முடித்தார், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
டாபிக்ஸ்