தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Abi Nakshatra: கல்லா பெட்டியில் தம்பி.. கை கொடுத்த அப்பா; துணிக்கடை ஓனரான அயலி அபி!

Abi Nakshatra: கல்லா பெட்டியில் தம்பி.. கை கொடுத்த அப்பா; துணிக்கடை ஓனரான அயலி அபி!

May 02, 2024, 01:52 PM IST

google News
ஆரம்பத்தில் அபியின் இந்த ஆசைக்கு பெற்றோர் சம்மதித்தாலும், உறவினர்கள் மற்றும் சுற்றுப்புறத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் அபியின் பெற்றோர் தன்னுடைய குழந்தையின் கனவுக்கு உற்ற துணையாக நின்று வருகின்றனர்.

மூக்குத்தி அம்மன், நவரசா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த போதும், அயலி வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர் நடிகை அபி நட்சத்திரா. இவர் தற்போது தொழிலதிபராக மாறி இருக்கிறார். அந்த கடைக்கு ‘அயலி பொட்டிக்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

2005ம் ஆண்டு பிறந்த அபி நட்சத்திராவுக்கு, சொந்த ஊர் மதுரை பக்கம் ராஜபாளையம். இவரது அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் உட்பட பல இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்களில் வேலை பார்த்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தாத்தாவால், பிசினஸை எடுத்து செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். 

இந்த நிலையில்தான் நட்சத்திரா திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட, அவரின் கனவுக்கு உறுதுணையாக இருந்து இருக்கிறார். 

ஆரம்பத்தில் அபியின் இந்த ஆசைக்கு பெற்றோர் சம்மதித்தாலும், உறவினர்கள் மற்றும் சுற்றுப்புறத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் அபியின் பெற்றோர் தன்னுடைய குழந்தையின் கனவுக்கு உற்ற துணையாக நின்று வருகின்றனர். 

அயலி வெப் சீரிஸில் நடித்தது குறித்து முன்னதாக இணையதளம் ஒன்றிற்கு பேசும் போது, “ அயலி வெப்சீரிஸில் நடித்ததில் ரொம்ப பெருமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரிஸ், அதில் நான் முக்கிய ரோலில் நடித்தது எனக்கு பெருமை தான்.

படப்பிடிப்பிற்கு முன்பே கிராமத்தில் தங்கி, கிராம மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் பேச்சு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். நான் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொண்ணு. நான் நடிக்க புறப்படும் போதே, உறவினர்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்ப்பு வந்தது.

அப்பா, அம்மாவுக்கு நிறைய அழுத்தம் வந்தது. எனக்கு இது பிடித்திருந்ததால், எனக்காக தான் அவர்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் விடுமுறை எடுத்துவிட்டால், ‘ஷூட்டிங் தான் போயிருக்கிறேன்’ என, என் பள்ளி தோழிகள் உறுதிபடுத்திவிடுவார்கள்

திரும்ப நான் வரும் போது, ‘என்னிடம் ஷூட்’ பற்றி கேட்பார்கள். ‘நான் சாதாரணமாக சொல்லி முடித்துவிடுவேன்’. ஆனால் அதையே, ‘இவ ரொம்ப ஓவரா பில்டப் பண்றா’ என்றெல்லாம் பேசியவர்களும் உண்டு. அது எனக்கு வருத்தம் தந்தது. அம்மா தான், என்னை சமாதானம் செய்தார்.

மூக்குத்து அம்மன் படத்திற்குப் பின் என்னை நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் என்னவாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அது அயலியில் முடிந்து விட்டது. முதலில் மேக்கப் இல்லாமல் இருப்பதை பார்க்கும் போது ஒரு மாதிரி இருந்தது. அதை ஃப்ரேமில் பார்த்த போது, அதுவே திருப்தியாக இருந்தது.

அயலி படத்திற்காக எடையை கூட்டியதை சகித்துக் கொள்ளும் விசயமாக நான் பார்க்கிறேன். அப்புறம், தாலி கட்டும் காட்சி. இந்த காட்சி பண்ணனுமா என்கிற ஃபீல் இருந்தது. ஆனால் அதுக்கு அப்புறம் இயக்குனர் எனக்கு புரிய வைத்தார், அதன் பின் அந்த காட்சியை பார்க்கும் போது சூப்பரான ஒரு ஃபீல் இருந்தது.

அனுபவங்களை நான் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். அதை தான் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். சில ஆண்கள், பெண்களை இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது கூடாது. அனைவரும் ஒன்று தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் பற்றி எல்லாருக்கும் புரிதல் வேண்டும். அயலி மூலம் புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அயலியில் வரும் தலைமை ஆசிரியை போல நான் யாரையும் பார்த்ததில்லை. என் அம்மா தான் எனக்கு தலைமை ஆசிரியை. அவருக்கு தான் அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும். நான் கடந்த எந்த ஆசிரியையும் எனக்கு அந்த அளவிற்கு ஆதரவு தர இல்லை.

எனக்கும் முதலில் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை தான் இருந்தது. இப்போது இன்ஜினியரிங் பண்ணிட்டு இருக்கேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி