Arya daughter: ஆர்யா பிறந்தநாள்… முதல் முறையாக மகள் போட்டோ வெளியிட்ட சாயிஷா
Dec 11, 2022, 01:49 PM IST
ஆர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மகள் புகைப்டம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் ஆர்யா, நடிகை சாயீஷாவை கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.
கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.
q தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு ஆரியானா என பெயரிட்டனர்.
குழந்தை பிறந்து ஒரு வருடமாகியும் இவர்கள் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தனர். அவரது ரசிகர்கள் பல முறை கேட்டாலும் குழந்தை புகைப்படத்தை மட்டும் இவர்கள் வெளியிடவே இல்லை.
இந்நிலையில் ஆர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு நடிகையும், அவரது மனைவியுமான சாயிஷா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே! நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை மற்றும் மனிதர்! நீங்கள் எங்கள் வாழ்வில் இருப்பதற்காக நாங்கள் மிகவும் பாக்கியவான்கள்!
என்னுடையதாக இருப்பதற்கு நன்றி. நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன். அனைவரும் எங்கள் பெண் குழந்தை அரியானாவை சந்திக்கவும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் படங்களை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.
டாபிக்ஸ்