யூ-டியூப்பில் ஒரேநாளில் ஹிட்டான டாப் 6 பாடல்கள்
Dec 11, 2022, 11:54 AM IST
கோலிவுட்டில் யூ-டியூப்பில் ஒரேநாளில் ஹிட்டான டாப் 6 பாடல்கள் குறித்து பார்க்கலாம்.
2022 ஆம் ஆண்டில் இதுவரை எத்தனையோ பாடல்கள் வெளியாகி உள்ளது. அந்த பாடல்கள் யூ-டியூப்பில் வெளியான நிலையில் ஒரேநாளில் அதிக பார்வையாளர்களை கடந்த டாப் 6 இடத்தில் இருக்கும் பாடல்களை பார்க்கலாம்.
அரபிக் குத்து
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த வருடம் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை கடந்த டாப் 6 லிஸ்டில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடினார்கள்.
ரஞ்சிதமே
வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த மாதம் வெளியானது. தமன் இசையமைத்திருந்த இந்த பாடலை
நடிகர் விஜய் பாடியிருந்தார். பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியிருந்தார். இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூ-டியூப் தளத்தில் 16.68 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
பத்தல பத்தல
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான, பத்தல பத்தல.
இந்த ஆண்டு வெளியாகி 450 கோடி வசூல் செய்த விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
கமல் ஹாசனின் நடனம் அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. அனிருத் இசையமைத்துப் பாடிய இந்த பாடலை கமல் ஹாசனே எழுதினார். இந்த பாடல் வெளியான 24 நேரத்தில் 11.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.
தீ தளபதி
வாரிசு படத்தின் 2 ஆவது பாடலான, தீ தளபதி வெளியான 24 மணி நேரத்தில் 11.04 மில்லியன் பார்வையாளர்கள் கடந்தது.
பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில், சிம்பு குரலில் பாடலுக்கு தமன் இசையமைத்து உள்ளார்.
சில்லா சில்லா
நடிகர் அஜித் இயக்கத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். இப்படத்தின் முதல் சிங்கிளான பாடலான சில்லா சில்லா பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை 'காக்கா கதை கேட்டிருக்கேன்' பாடல் புகழ் வைஷாக் எழுதியுள்ளார். சில்லா சில்லா பாடல் யூ-டியூப் தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9.9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. டாப் 6 லிஸ்டில் இந்த பாடல் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 3 அனிரூத் பாடலும், 2 தமன் பாடலும், 1 ஜிப்ரனின் பாடலும் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்