தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அருந்ததிக்கு அப்புறம் விபச்சாரியா நடிக்க வேண்டாம்னு.. தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்’ - அனுஷ்கா

‘அருந்ததிக்கு அப்புறம் விபச்சாரியா நடிக்க வேண்டாம்னு.. தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்’ - அனுஷ்கா

Nov 12, 2024, 03:39 PM IST

google News
தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்தான் இருக்கிறது என்று பிரபல நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்தான் இருக்கிறது என்று பிரபல நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்தான் இருக்கிறது என்று பிரபல நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் கதாபாத்திரத்திற்காக உடல் எடை அதிகரித்த அனுஷ்காவிற்கு, அதனை குறைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதன் காரணமாக, அவருக்கு பட வாய்ப்புகளும் பெரிதளவில் குறைந்தன. இந்த நிலையில், அவர் தற்போது  ‘காதி’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் அனுஷ்கா கதையை தேர்ந்தெடுப்பதில் தனக்கு இருக்கும் பார்வையை பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு சில வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

வித்தியாசமானவையாக இருந்தன.

இது குறித்து அவர் பேசும் போது, “நான் திரைத்துறைக்கு வந்த புதிதில், எனக்கு என்ன செய்ய வேண்டும், வாய்ப்பை எப்படி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தான எந்த ஐடியாவும் கிடையாது.

அருந்ததி’ திரைப்படத்தை இயக்கிய கொடி இராமக்கிருஷ்ணாவுக்கு அந்தக்கதையின் மீது இருந்த நம்பிக்கைதான் என்னை அந்த படத்தில் நடிக்க வைத்தது. நான் என்னுடைய கெரியரில், இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் பெரிதாக யோசித்தது கிடையாது. ஆனால் இயல்பாக எனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமானவையாக இருந்தன.

 

5 வருடங்கள் கால்ஷீட்

பாகுபலி திரைப்படத்திற்கு 5 வருடங்கள் கால்ஷீட் கொடுத்ததை பற்றி கேட்கிறீர்கள், ஆனால் அந்தப்படத்தை ராஜமவுலி இயக்குகிறார் என்பது தெரிந்தவுடன், இந்தத் திரைத்துறை அதைப்பற்றியெல்லாம் முற்றிலும் மறந்து விட்டது. இருப்பினும் எனக்கு ஒரு கதை பிடித்து விட்டது என்றால், அது என் இதயத்தோடு நெருக்கமாகி விட்டது என்றால், யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.

 

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படத்திற்கு இடையேதான் நான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிக்க கமிட்டானேன். அப்போது பல பேர் இந்த சமயத்தில், இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். காரணம், அந்த படத்தில் நான் எடையை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியமான கருவாக இருந்தது. அதில் அவர்களுக்கு ஒரு விதமான பயம் இருந்தது.

தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும்

ஆனால், ஒரு நடிகராக உங்களின் இதயத்தைக் கவர்ந்த ஒரு கதையில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், இந்த திரைத்துறையில் நீங்கள் எதற்கு இருக்க வேண்டும். இது சில சமயங்களில் தைரியத்தை வெளிப்படுத்தும் விஷயமாக இருக்கலாம். தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது.

 

உண்மையில் தைரியம் என்பது நீங்கள் எடுக்கும் பரீச்சார்த்த முயற்சிகளில் இருந்துதான் கிடைக்கும். என்னுடைய கெரியரில் அதிர்ஷ்டவசமாக நான் அது போன்ற கதைகளில் நடித்திருக்கிறேன். ‘அருந்ததி’ திரைப்படத்திற்கு பின்னர் நான் ஒரு விபச்சாரியாக ‘வானம்’ திரைப்படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நான் கமிட்டாகும் பொழுது ‘அருந்தத’ போன்ற படத்தில் நடித்துவிட்டு, இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்காதீர்கள் என்று பலர் கூறினார்கள்.

ஆனால், எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. அதனால் அந்த படத்தில் நான் நடித்தேன். எனக்கு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று இதயபூர்வமாக தோன்றி விட்டால், அது எனக்குள் லாக் ஆகிவிடும். அதில் கிடைப்பது லாபமோ, நஷ்டமோ அதை நான் ஏற்றுக் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறேன்.” என்று பேசினார். கம்பேக் தரமா இருக்கணும்!

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி