Seeman: அருந்ததியர் குறித்த சர்ச்சை பேச்சு;சீமான் மீது பாய்ந்த வழக்கு; பின்னணி!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஆகையால் அனைத்துக்கட்சி தலைவர்களும் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அருந்ததியினர் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததாக கூறி பிரச்சினை எழுந்தது. இந்த நிலையில் பட்டியலின அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முழு விபரம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு திருநகர் காலணியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சமூக மக்களும் சீமானுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதனைத்தொடர்ந்து இது தொடர்பான புகார் மனுக்களையும் தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் கொடுத்தனர்.
அதில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நேற்று இரவு கூட, திருநகர் பகுதி மக்கள் அந்தப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடிய மேனகா நவநீதினிடம் 24 மணி நேரத்திற்குள் இதற்குரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர் கடிதம் கொடுத்தார். ஆனால் புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், தேர்தல் அலுவலர் பரிந்துரையின் பேரில் தற்போது சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்