தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அவ்வளவு அவமானப்படுத்துறாங்க.. கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க.. நெருப்பைக் கக்கிய அல்லு அர்ஜூன்

அவ்வளவு அவமானப்படுத்துறாங்க.. கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க.. நெருப்பைக் கக்கிய அல்லு அர்ஜூன்

Marimuthu M HT Tamil

Dec 21, 2024, 11:41 PM IST

google News
அவ்வளவு அவமானப்படுத்துறாங்க.. கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க.. நெருப்பைக் கக்கிய அல்லு அர்ஜூன் பற்றி அறியலாம்.
அவ்வளவு அவமானப்படுத்துறாங்க.. கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க.. நெருப்பைக் கக்கிய அல்லு அர்ஜூன் பற்றி அறியலாம்.

அவ்வளவு அவமானப்படுத்துறாங்க.. கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க.. நெருப்பைக் கக்கிய அல்லு அர்ஜூன் பற்றி அறியலாம்.

அவ்வளவு அவமானப்படுத்துறாங்க என்றும், கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க எனவும் தெலங்கானா முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அல்லு அர்ஜூன் பதிலளித்துள்ளார். 

நடந்தது என்ன?:

உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.

அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் மூளைச்சாவு அடைந்தார். தற்போது வென்டிலேட்டரில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்தச் சம்பவம் குறித்து தெலங்கானா சட்டப்பேரவையில், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜூன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

’ஒருவர்கூட பார்க்கப் போகவில்லை’: தெலங்கானா முதலமைச்சர்

இதுதொடர்பாக பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ‘’ சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். என்னைத் திட்டுறாங்க. என்ன சபாநாயகர் அவர்களே, அந்த சினிமா பிரமுகருக்கு கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு. ஒன்றும் ஆகவில்லை. ஆனால், சினிமா பிரமுகரை ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் சென்று விசாரிக்கின்றனர்.

ஆனால், அந்த சினிமா பிரமுகரில் ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைச் சென்று பார்க்கவில்லை. இதனால் சினிமாவில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

தெலங்கானா முதலமைச்சருக்கு ரியாக்ட் செய்த அல்லு அர்ஜுன்:

அதைத்தொடர்ந்து மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜூன் கூறுகையில், ‘’தியேட்டரில் நடந்த நெரிசல் என்பது ஒரு விபத்து. இதில் யாருடைய தவறும் அல்ல. தியேட்டர் உரிமையாளர் வரும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சித்ததும், நான் ஒரு நல்ல சினிமாவை செய்ய முயற்சித்ததும், போலீஸ்காரர்கள் சினிமா ரசிகர்களை முயற்சித்ததும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது. இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த ஃபேமிலிக்கு நடந்தது மிக மிக துரதிர்ஷ்டம். நான் ரொம்ப வேதனைப்படுறேன்னு சொல்றேன். 

என்னுடைய வாழ்க்கை லட்சியமே, தியேட்டருக்கு வரும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பது தான். தியேட்டருக்கு வரும் அனைவரையும் சந்தோஷப்படுத்தி அனுப்பவேண்டும் என்பதே என் நோக்கம் அப்பா. நீங்கள் ஜெயித்ததுபோல் உணர்வைத் தரவேண்டும் என்பதுதான் எனதுநோக்கம். தியேட்டர் என்பதுவே எனக்கு ஒரு கோயில் மாதிரி. அப்படி ஒரு இடத்தில் விபத்து நடந்தால் என்னை விட வருத்தப்படுறவங்க வேறு யாராவது இருக்கமுடியுமா?

அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன். அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் முதல் நோக்கம், நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. என்னைப் பற்றிய தவறான தகவல்கள், தவறான குற்றச்சாட்டுகள் பரவுகிறது. நான் எந்தத் துறையையும் எந்த அரசியல் தலைவரையும் குற்றம்சாட்டவில்லை. நாங்கள் மாநில அரசால் செயல்பாடுகளால் மகிழ்ச்சி தான் அடைந்திருக்கிறோம். சிறப்பு டிக்கெட்கள் விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருக்காங்கன்னு நாங்கள் சந்தோஷம் தான் படுறோம். நான் இப்படி நடந்தேன். இவர் இப்படிபட்டவர்தான் அப்படி நிறைய தவறான குற்றச்சாட்டுகளை சொல்வது  என்னை அவ்வளவு அவமானப்படுத்துகிறது.

இருபது வருஷமாக என்னை நீங்கள் பார்க்கிறீர்கள் தானே. நான் என்றைக்காவது அப்படி செய்திருக்கிறேனா?. அதனால் இந்த அணுகுமுறை ரொம்ப வேதனையைத் தருது. குறிப்பாக, என் கேரக்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வேதனையைத் தருது. யார் யாரோ இறந்ததை எல்லாம் நான் போய் விசாரிக்கும்போது எனது சொந்த ரசிகை இறந்ததை விசாரிக்காமல் இருப்பேனா’’எனத் தெரிவித்தார், நடிகர் அல்லு அர்ஜுன்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி