அல்லு அர்ஜூன் குற்றவாளியா.. மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தது தவறு தானே.. நாட்டாமை ஆக மாறி நியாயம் பேசிய சரத்குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அல்லு அர்ஜூன் குற்றவாளியா.. மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தது தவறு தானே.. நாட்டாமை ஆக மாறி நியாயம் பேசிய சரத்குமார்

அல்லு அர்ஜூன் குற்றவாளியா.. மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தது தவறு தானே.. நாட்டாமை ஆக மாறி நியாயம் பேசிய சரத்குமார்

Marimuthu M HT Tamil
Dec 15, 2024 11:55 AM IST

அல்லு அர்ஜூன் குற்றவாளியா.. மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தது தவறு தானே என நாட்டாமை ஆக மாறி நியாயம் பேசிய சரத் குமார் உடைய பேச்சு வைரல் ஆகியுள்ளது.

அல்லு அர்ஜூன் குற்றவாளியா.. மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தது தவறு தானே.. நாட்டாமை ஆக மாறி நியாயம்பேசிய சரத்குமார்
அல்லு அர்ஜூன் குற்றவாளியா.. மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தது தவறு தானே.. நாட்டாமை ஆக மாறி நியாயம்பேசிய சரத்குமார்

அல்லு அர்ஜூன் கைது குறித்தும் நடிகர் மோகன் பாபுவின் செயல்குறித்தும் நடிகர் சரத்குமார் கூறுகையில், ‘’ஒரு இடத்தில் கூட்டம் வருகிறது என்றால் அது நிச்சயம் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தெரிஞ்சு இருக்கும். கூட்டம் குறித்து தியேட்டர் ஓனர் காவல் துறையிடம் சொல்லியிருக்கிறார். அல்லு அர்ஜூன் வருவதை அறிந்து போலீஸ் பந்தோபஸ்து கேட்டிருக்கிறார். இந்நிலையில் காவல் துறையினர் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது அல்லு அர்ஜூனை வரவேண்டாம் என்று அழைத்துச் சொல்லியிருக்கலாம். அல்லு அர்ஜூன் வந்தபோது நடந்த விபத்துக்கு அவர் தான் குற்றவாளி என சொல்வது எந்தவகையில் நியாயம்.

வீர தீர சாகசம் நடக்கும்போது 5 பேர் இறந்தாங்க. அப்போது யாரை கைது செய்தீங்க. முடியாதுல. நாம் பாதுகாப்பு வழங்கவில்லை.

மோகன் பாபு பத்திரிகையாளரைத் தாக்கினார் என்று சொல்கிறார்கள். அவரை எனக்கு வெகு காலமாகத் தெரியும். அவருக்கும் அவரது மகனுக்கும் இருக்கும் பிரச்னையில், மோகன் பாபுவுடைய மகன் அவரது வீட்டுக்குச் செல்ல உரிமை இருக்கிறது. மோகன் பாபுவின் மகன் கதவைத் திறந்து செல்லும்போது, மோகன் பாபுவுக்கு எப்படி இவங்க பத்திரிகையாளர்னு தெரியும்.

அவரது எதிரிகள் உள்ளே வந்திருப்பார்கள் என நினைத்து இருக்கலாம் தானே.. அவர் வீட்டுக்குள்ள போனதால் தானே தாக்கினார், வெளியில் வைத்து இந்தச் செயலை செய்யவில்லையே’ என நடிகர் சரத் குமார் பேட்டியளித்துள்ளார்.

அல்லு அர்ஜுனுக்கு நடந்தது என்ன?:

உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.

அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4 ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். போலீசார் சிபிஆர் சிகிச்சை செய்து சிறுவனை மீட்டனர்.

அல்லு அர்ஜுன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள்:

அல்லு அர்ஜுன் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜுனை டிசம்பர் 13ஆம் தேதி காலையில் அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.

வீட்டின் முதல் மாடியில் உள்ள அல்லு அர்ஜுனை நெருங்கிய அதிரடிப் படையினர், ஹைதராபாத் சிக்கடபள்ளி போலீசார் அவரை கைது செய்வதாக தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

படுக்கை அறையில் இருந்த அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்திருந்த அல்லு அர்ஜூனை லிப்டில் இருந்து கீழே இறங்கிய போலீஸார், பின்னர் அவரது ஆடைகளை மாற்ற பணித்தனர். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அல்லு அர்ஜுனின் தந்தை அரவிந்த் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

பிணையில் வந்த அல்லு அர்ஜுன்:

இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜூன் தரப்பில் இருந்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். ஆனாலும் அவர் டிசம்பர் 13ஆம் தேதி இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அடுத்த நாள் காலையிலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வெளியில் வந்ததும் இதுகுறித்து அல்லு அர்ஜூன் பேசும் போது, “எனக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவலைப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். சட்டத்தை மதித்து அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மீண்டும் என்னுடைய இரங்கலை இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.