தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thunivu: அஜித்திற்கு அது பிடிக்காது… ஹெச்.வினோத்

Thunivu: அஜித்திற்கு அது பிடிக்காது… ஹெச்.வினோத்

Aarthi V HT Tamil

Dec 06, 2022, 10:30 AM IST

நடிகர் அஜித்திற்கு தன்னை மிகைப்படுத்தி பேசினால் பிடிக்காது என இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்திற்கு தன்னை மிகைப்படுத்தி பேசினால் பிடிக்காது என இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்திற்கு தன்னை மிகைப்படுத்தி பேசினால் பிடிக்காது என இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இப்படம் பொங்கல் பண்டிகைக்கு  திரையில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு விளம்பர பணியில் ஈடுபட்டு வருகிறது.

இப்படம் குறித்து சமீபத்தில் பல விஷயங்களை இயக்குநர் ஹெச். வினோத் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அஜித் குறித்து பேசிய ஹெச்.வினோத், "துணிவு படத்தில் ஒரு பாட்டு செல்ஃப் குளோரிஃபிகேஷனா (தன்னை மிகைப்படுத்தி பேசுதல்) இருக்கு என சொல்லி அஜித் அந்த வரிகளை மாற்ற சொன்னார். 

அது ஹீரோ பாத்திரத்தோட வேல்யூவை சொல்கிற வரி என சொல்லி அவரை சமாதானப்படுத்தினேன். அது பெரிய போராட்டமாக இருந்தது. படத்தின் தலைப்பில் கூட வீரன் என்பதற்கு பதிலாக வீரம் என வைக்க சொன்னவர் அஜித் தான்.

மற்ற விஷயங்களில் அவர் தலையிடவே மாட்டார். முதலில் பொதுவான சந்திப்பு நடக்கும். பிறகு ஒன் லைன் கேட்பார். கால் மணி நேரம் டிரெய்ல்ட்டாக சொல்ல வேண்டும். 

படத்தில் நடிப்பது யார் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். சர்ச்சையான ஆட்கள் இல்லாதது போல் பார்த்து கொள்ள வேண்டும்” என்றார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.