Vindhya: 15 வருஷம் ஆச்சு மேக்கப் போட்டு.. அம்மா தான் என் பலவீனம் - நடிகை விந்தியா எமோஷனல்
Sep 24, 2024, 05:27 PM IST
Vindhya: 15 வருஷம் ஆச்சு மேக்கப் போட்டு எனவும், அம்மா தான் என் பலவீனம் எனவும் நடிகை விந்தியா அளித்த பேட்டி வைரல் ஆகியுள்ளது.
Vindhya: 15 வருஷம் ஆச்சு மேக்கப் போட்டு என்றும், அம்மா தான் தன் பலவீனம் எனவும் நடிகை விந்தியா, பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டி பலரையும் உருக்கியுள்ளது.
இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை விந்தியாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு விந்தியா அளித்த பதில்களின் தொகுப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
’உங்களின் பலம்?
விந்தியாவின் பதில் - அம்மா
உங்களது பலவீனம்?
விந்தியாவின் பதில்: அதுவும் அம்மா தான். ஏனென்றால், அவங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், என்னால் தாங்க முடியாது.
கடைசியாக அழுதது, பாதித்தது?
விந்தியாவின் பதில்: நிறைய அழுதது. பாதித்தது வந்து ஜெயலலிதா அம்மாவை மிஸ் செய்யும்போது தான்.
டைம் மிஷின் கிடைக்குது. ஏதாவது ஒன்றை மாற்ற நினைத்தால் என்ன செய்வீர்கள்?
விந்தியாவின் பதில் - எங்கள் அம்மா ஜெயலலிதா அவர்களை பிழைக்கவைப்பேன். வேற எதுவும் மாத்தணும்னு எல்லாம் இல்லை.
ஜெயலலிதா அம்மாவைப் பார்த்தால் முதலில் கேட்கும் கேள்வி என்ன?
விந்தியாவின் பதில்: நல்லாயிருக்கீங்களா அம்மான்னு கேட்பேன். ஒவ்வொரு தடவையும் கேட்பேன்.
உங்கள் அம்மாவிடம் என்ன கேட்பீர்கள்?
விந்தியாவின் பதில்: சாப்பிட்டீங்களாமான்னு கேட்பேன்.
ஒரு நாள் முதலமைச்சராக விந்தியா ஆனால், என்ன செய்வீர்கள்?
விந்தியாவின் பதில்: (சிரிக்கிறார்). படிப்புக்காக நிறைய செய்வேன். படிப்பு இருந்தால் ஒழுக்கம் வரும். சொத்தை கூட யாராவது ஏமாத்திடுவாங்க. சம்பாதிச்ச காசு, நகை எல்லாத்தையும் திருடிட்டுப்போயிட முடியும். உங்களுடைய அறிவை யாரும் திருடமுடியாது.
சினிமாவை நீங்கள்விடும்போது கஷ்டமாக இருந்ததா? பிடித்த விஷயத்தை விட்டுட்டுப்போறோமே அப்படின்னு?
விந்தியாவின் பதில்: நான் சினிமாவில் ரொம்ப சொகுசாக இருந்தது கிடையாது. அப்போது இருந்ததைவிட என் வாழ்க்கை முற்றிலும் மாறிடுச்சு. அப்படியே மெதுவாக சினிமாவில் இருந்து வெளியில் வந்துட்டேன்.
படம் பார்க்கும்போது சினிமாவை விட்டுட்டோமேன்னு தோணுமா?
விந்தியாவின் பதில்: நான் நடிக்கணும்னு எல்லாம் நினைக்கல. சினிமாவை ரசிச்சுப் பார்த்து, நல்லா நடிச்சிருக்காங்களேன்னு தான் தோணும்.
முத்து திரைப்படத்தில் ‘தில்லானா தில்லானா’ பாட்டுக்கு மீனா இல்லாமல் மற்ற யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது. நீலாம்பரி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்கமுடியாது. அப்பாவிப் பெண்ணாக செளந்தர்யாவை தவிர யாரையும் நினைக்கமுடியாது. ரம்பாவை விட தைரியமாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஆடுபவரை இமேஜின் செய்யமுடியாது. யாரும் யாருக்கும் மாற்று கிடையாது. ஒவ்வொருத்தவங்களுக்கும் தனித்தன்மை இருக்கு. முதன்முதலில் தமிழ்நாட்டில் நடிகைக்கு கோயில் கட்டுனதே, நம்ம குஷ்பூவுக்குத் தான். அப்படி சினிமாவில் சாதிச்ச பெண்கள் நிறைய பேர் இருக்காங்க.
கடைசியாக சினிமாவில் வந்த படவாய்ப்பு?
விந்தியாவின் பதில்: ராஜமெளலி சாரோட அப்பா ஒரு படம் எடுத்தார். அப்போது அவருடைய படத்தில் ஒரு நெகட்டிவ் ரோலுக்கு மேனேஜர்கள் வந்து அப்ரோச் பண்ணுனாங்க. ஒரு ஜமீன்தார் லேடி மாதிரி. அப்போது நான் பண்ணமுடியல.
இப்போது யாராவது வந்து படவாய்ப்புகளுக்கு கேட்கிறாங்களா?
விந்தியாவின் பதில்: விளம்பரம் பண்றதுக்கெல்லாம் மேனேஜர்ஸ் கேட்பாங்க. 15 வருஷம் ஆச்சு மேக்கப் போட்டு, இனிமேல் அதில் ஆர்வம் இல்லை.
உன்னையே நீ ரசிக்கிற விஷயம்?
விந்தியாவின் பதில்: என்னோட தைரியம் எனக்குப் பிடிக்கும். நான் உண்மையை மட்டுமே பேசுவேன். எந்த சூழ்நிலையிலும் பொய் பேசமாட்டேன்.
உங்கள் பேச்சு மேடைகளில் எப்படி இருக்கும்?
விந்தியாவின் பதில்: எந்த மேடைக்குப் போனாலும், முதலில் அம்மாவுக்கு வணக்கம் வைச்சிட்டுத்தான் அடுத்த தலைவர்களுக்கு வணக்கம் சொல்வேன். அதுக்கப்புறம் என்னை மதிச்சு வந்திருக்கும் ஜனங்களுக்குத் தான் வணக்கம் வைப்பேன். பூமிக்கு வணக்கம் வைப்பேன். நான் மதுரைக்குப் போனால், மதுரையோட சிறப்புகளை எல்லாம் பேசுவேன். கோவை போனால் கோவை சிறப்புகளை பேசுவேன். விழுப்புரம் போனால் அதன் சிறப்புகளை எல்லாம் பேசுவேன். அதற்கான புத்தகங்கள் எல்லாத்தையும் முன்னாடியே படிச்சிருக்கேன். அந்த மக்களுக்குக் கொடுக்கிற மரியாதையும் ஊருக்குக் கொடுக்கிற மரியாதையும் ரொம்ப முக்கியம். பேச்சு நம்ம பேசுறோம். நம்ம பேச்சினை மதிச்சு கேட்க வந்திருக்காங்க. அவங்களுக்கு மரியாதை செய்யணும்னு நினைப்பேன்’’ என நடிகை விந்தியா பேசியுள்ளார்.