Coimbatore: 30 நிமிடத்தில், 6 ப்ளேட் பிரியாணி சாப்பிட்டால் ரூ. 1 லட்சம் பரிசு - கோவையில் குவிந்த பிரியாணி பிரியர்கள்
- கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் போன்ற வடிவமைப்பில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் என்ற அந்த ஹோட்டல் நிர்வாகம் கடை திறப்பு நாளை முன்னிட்டு போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி 6 பிளேட் பிரியாணியை 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரியாணி பிரியர்கள் பலரும் ஆர்வமாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். பிரியாணி சாப்பிடும் போட்டியில் பங்கேற்க 400 பேர் வரை பதிவு செய்துள்ளனர், இன்னும் பலரும் பதிவு செய்கின்றனர் எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.