Actor Vishal: “அந்த துட்டு எங்க போச்சுன்னு உங்களுக்கு தெரியாதா?..- தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் பதிலடி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vishal: “அந்த துட்டு எங்க போச்சுன்னு உங்களுக்கு தெரியாதா?..- தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் பதிலடி!

Actor Vishal: “அந்த துட்டு எங்க போச்சுன்னு உங்களுக்கு தெரியாதா?..- தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 26, 2024 08:18 PM IST

Actor Vishal: உங்களின் வேலையை நீங்கள் ஒழுங்காக செய்யுங்கள்.. இந்தத்திரைத்துறையில் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. - தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் பதிலடி!

Actor Vishal: “அந்த துட்டு எங்க போச்சுன்னு உங்களுக்கு தெரியாதா?..- தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் பதிலடி!
Actor Vishal: “அந்த துட்டு எங்க போச்சுன்னு உங்களுக்கு தெரியாதா?..- தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் பதிலடி! ( actorvishalofficial)

கதிரேசனுக்கு தெரியாதா? 

அதில், “ இந்த முடிவு, எல்லோரும் ஒரு மித்த கருத்தோடு எடுத்தது என்பது, உங்கள் குழுவில் இருக்கும் கதிரேசன் உட்பட உங்கள் அனைவருக்கும் தெரியாதா?  இந்த நிதியானது, தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் முதியவர்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் வழங்கப்படுவது உங்களுக்குத் தெரியாதா? அவர்களின் கல்விச் செலவு, மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விழாக்களின் போது அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?

உங்களின் வேலையை நீங்கள் ஒழுங்காக செய்யுங்கள்.. இந்தத்திரைத்துறையில் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் இங்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக இருக்கின்றன. விஷால் தொடர்ந்து படங்களை செய்து கொண்டுதான் இருக்கப்போகிறார். படங்களை தயாரிக்காத, இனிமே தயாரிக்கவே போகாத தயாரிப்பாளர்களாகிய நீங்கள் என்னை தடுக்க முயற்சி எடுங்கள். படிப்படியாக சிந்தியுங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். 

என்னதான் பிரச்சினை?

முன்னதாக, “நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்த பின்னரே, தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த 2017- 2019 ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்தது. 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு ஸ்பெஷல் ஆடிட்டரை நியமித்தார்.

விஷால் மீது முறைகேடு புகார் 

அந்த ஸ்பெஷல் ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில், அப்போது சங்கத்தில் இருந்த நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுமார் ரூ.12 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்திற்கே திரும்ப அளிக்க வேண்டும் என்று விஷாலுக்கு பலமுறை தெரியப்படுத்தியும், அவர் இதுநாள் வரை எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.

ஆகவே, மேற்படி விஷயத்தினை சரிசெய்யும் பொருட்டு, ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி, பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்த பின்னரே, தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.