தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகை ரம்பா விவாகரத்து செய்ய போகிறாரா? காட்டு தீயாய் பரவும் செய்தி.. ஏன் இப்படி.. முற்றுப்புள்ளி வைத்த ரம்பா!

நடிகை ரம்பா விவாகரத்து செய்ய போகிறாரா? காட்டு தீயாய் பரவும் செய்தி.. ஏன் இப்படி.. முற்றுப்புள்ளி வைத்த ரம்பா!

Divya Sekar HT Tamil

Oct 26, 2024, 10:44 AM IST

google News
Actress Rambha : பிரபல நடிகை ரம்பா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் மிகப்பெரிய பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து ரம்பா சொல்வது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Actress Rambha : பிரபல நடிகை ரம்பா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் மிகப்பெரிய பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து ரம்பா சொல்வது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Actress Rambha : பிரபல நடிகை ரம்பா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் மிகப்பெரிய பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து ரம்பா சொல்வது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1993ல் பிரபு நடித்த உழவன் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியான நடிகையாக மாறினார் ரம்பா. தமிழில் தொடை அழகி என்றெல்லாம் அடைமொழியோடு அழைக்கப்பட்ட ரம்பா, முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90களில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

சுந்தர புருஷன், சிவசக்தி,அடிமைச் சங்கிலி, செங்கோட்டை, அருணாச்சலம், காதலர் தினம்,நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா காதலா, மின்சாரக் கண்ணா,பந்தா பரமசிவன், குங்குமப்பொட்டுக்கவுண்டர், என்றென்றும் காதல், சுயம்வரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

விஜயலட்சுமி என்கிற ரம்பா

ரம்பாவின் முதல் பெயர் விஜயலட்சுமி. இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். ரம்பா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நாடகத்தில் நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஹரிஹரன் அவிரா, ரம்பாவின் நடிப்பை விரும்பி அவருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 'சர்கம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. படம் வெளியானதும் விஜயலட்சுமியின் பெயர் ரம்பா என மாற்றப்பட்டது. ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, கணவர் மற்றும் குழந்தைகளுடன் செட்டிலாகிவிட்ட பல நடிகைகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ள சம்பவங்கள் ஏராளம். தற்போது ரம்பாவும் மீண்டும் சினிமாவுக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஆனால், ரம்பா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பப் போவதாக வதந்திகள் பரவி வருகின்றன.

கணவருடன் சிறிய கருத்து வேறுபாடு

கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார் ரம்பா.3 குழந்தைகளின் தாயான ரம்பா சமீபத்தில் தனது கணவருடன் சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், அவை அனைத்தும் அனைவரின் வீட்டிலும் இருந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் இப்போது அதே பிளவு பெரிதாகி விவாகரத்துக்கு வந்துள்ளது. ரம்பா விரைவில் சட்டப்படி விவாகரத்து பெற்று தனது குழந்தைகளுடன் இந்தியா வந்து சினிமாவில் நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது.

ரம்பா வருத்தம்

2010 ஆம் ஆண்டில், ரம்பா வீட்டில் பார்த்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை மணந்தார், பின்னர் கனடாவின் ஒன்டாரியோவின் டொராண்டோவுக்கு குடிபெயர்ந்தார். ரம்பாவுக்கு லாவண்யா மற்றும் சாஷா என்ற இரண்டு மகள்களும், சிவன் என்ற மகனும் உள்ளனர். சினிமாவுகளில் இருந்து விலகி இருந்தாலும், ரம்பா சமூக ஊடகங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் தன்னையும் தனது குழந்தைகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட புயலை கேட்டு வருத்தம் அடைந்துள்ளனர்.

ஏன் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றார்கள்

இது தொடர்பாக அவர் பேசும்போது, " நான் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது. ஏன் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றார்கள் எனத் தெரியவில்லை. இது போன்ற தகவல்கள் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. எங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி