Rambha : ‘விவசாயி ஆனார் ரம்பா.. ஆப்பிள் தோட்டத்தில் ஆர்ப்பரித்த சந்தோசம்’ முழு வீடியோ இதோ!
Rambha : ரம்பாவின் இந்த வீடியோ பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவருடைய ரசிகர்கள் சிலர், வழக்கம் போல, கமெண்ட் என்கிற பெயரில் அசடு வழிந்தததையும் பார்க்க முடிந்தது.

Rambha: உண்மையான ‘அழகிய லைலா..’ ரம்பா.. 90களில் இளைஞர்களின் இதயக்கன்னி என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கை தமிழரை மணம் முடித்த ரம்பா, அதன் பின் அவருடன் கனடாவில் குடிபெயர்ந்தார். அங்கு வியாபாரம், குடும்பம், குழந்தைகள் என பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது இந்தியா வந்து, தன்னுடைய நண்பர்களை சந்தித்து செல்வது ரம்பாவின் வழக்கம். 3 குழந்தைகளுடன் முத்தான வாழ்க்கை வாழ்ந்து வரும் ரம்பா, சமூக வலைதள பக்கத்தில் பயங்கர ஆக்டிவ்வாக இருப்பவர். சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவு, வைரலாகி வருகிறது. இதுவரை வியாபார குடும்பத்தில் இருந்து வந்த ரம்பா, தற்போது விவசாயி அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் சாதாரண விவசாயம் அல்ல, பழங்களின் தங்கம் என்று அழைக்கப்படும் ஆப்பிள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார் ரம்பா.
தன்னுடைய தோட்டத்தில் விளைந்த ஆப்பிள் பழங்களை அறிமுகம் செய்து வைத்துள்ள ரம்பா, அவற்றை சுற்றி சுற்றி வீடியோ எடுத்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பழங்களை பறித்து, அவற்றை கடித்து சாப்பிட்டு, ருசியையும் உணர வைக்கிறார். ஒரு படத்தில் ரம்பா ஸ்வீட் சாப்பிடுவதை பார்த்திபனும்-விவேக்கும் கமெண்ட் அடிப்பார்கள். ‘ஒரு ஸ்வீட்டே.. ஸ்வீட் சாப்பிடுகிறதே.. அடடே..’ என்று பேசிக் கொள்வார்கள், அந்த மாதிரி தான், ‘ஒரு ஆப்பிளே.. ஆப்பிள் சாப்பிடுகிறதே..’ என்று தோன்றும் அளவிற்கு, முகம் நிறைய புன்னையுடன், ப்ரஷ் ஆப்பிளை பிடுங்கி சாப்பிடுகிறார் ரம்பா.