இத நீங்க எப்படி சமாளிக்கிறீர்கள்.. விவாகரத்து குறித்து கேட்ட கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ஜெயம் ரவி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இத நீங்க எப்படி சமாளிக்கிறீர்கள்.. விவாகரத்து குறித்து கேட்ட கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ஜெயம் ரவி!

இத நீங்க எப்படி சமாளிக்கிறீர்கள்.. விவாகரத்து குறித்து கேட்ட கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ஜெயம் ரவி!

Divya Sekar HT Tamil
Oct 26, 2024 09:12 AM IST

Jayam Ravi : தான் ஒரு பொது நபராக இருப்பதால், என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை புறக்கணிக்க முடியாது. நான் எதை செய்தாலும் அவர்கள் அது பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இத நீங்க எப்படி சமாளிக்கிறீர்கள்.. விவாகரத்து குறித்து கேட்ட கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ஜெயம் ரவி!
இத நீங்க எப்படி சமாளிக்கிறீர்கள்.. விவாகரத்து குறித்து கேட்ட கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ஜெயம் ரவி!

ஜெயம் ரவி- ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த மறுநாளே என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ரவியை எத்தனையோ முறை தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்த பின்னர் கூட, அவர் அதற்கு உடன்படவில்லை என்றும் ரவி மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், ஆர்த்தி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர் என்னுடைய அமைதி பலவீனம் ஆகாது என்று எச்சரிக்கை விடுத்தார். 

என்னுடைய விளக்கத்தை கொடுத்து கொண்டிருக்க முடியாது

இந்நிலையில், ஜெயம் ரவி 'பிரதர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, "விவாகரத்து பற்றி மக்கள் பேசும் வதந்திகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ தான் ஒரு பொது நபராக இருப்பதால், என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை புறக்கணிக்க முடியாது. நான் எதை செய்தாலும் அவர்கள் அது பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்கள் சினிமாவை விரும்புகிறார்கள்.

 நடிகர்களை பற்றி பேச விரும்புகிறார்கள். அதனால் அவர்களை நான் குறை சொல்ல முடியாது அதில் அர்த்தமும் இல்லை. உண்மை என்ன என்பதை மட்டுமே எடுத்து சொல்ல முடியும். மற்றபடி வரும் வதந்திகளை பார்த்து அமைதியாக தான் இருக்க வேண்டும். ஒருபோதும் என்னால் மக்களை தனித்தனியாக சந்தித்து என்னுடைய விளக்கத்தை கொடுத்து கொண்டிருக்க முடியாது. அது சாத்தியம் அற்றது” என தெரிவித்துளளார்.

குறை சொல்வதில் அர்த்தமில்லை

முன்னதாக, ஜெயம்ரவி தன்னுடைய பர்சனல் விவகாரம் பொதுவெளியில் பேசப்படுவது குறித்து சமீபத்தில் கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசினார். அவர் பேசும் போது, “ என்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசும் நபர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் எது செய்தாலும் அது பேசுபொருளாகும். மக்கள் சினிமாவைப் பற்றியும், நடிகர்கள் பற்றியும் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறார்கள்.

ஆகவே, அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஒவ்வொருவரிடம் சென்று நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக இருங்கள் என்று என்னால் கூற முடியாது. புரிதல் கொண்ட சில பேர் அதனைச் செய்வதில்லை. ஆனால் சிலர் பிரச்சினையின் ஆழம் தெரியாமல், என்னுடைய பர்சனல் விஷயங்களை பேசுகிறார்கள். என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த பிறகு, மற்றவர்கள் சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.