Actress Mohini: ‘தாய்ப்பால் கொடுக்கணும்னு ரொம்ப கறாரா.. அப்படி அழுதேன்.. அவர்தான்’ - கணவர் குறித்து எமோஷனல் ஆன மோகினி!
Apr 24, 2024, 11:08 AM IST
நான் மிகச் சிறிய வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டதால், என்னுடைய பிரசவம் அவ்வளவு இலகுவாக அமைந்தது. குழந்தைக்கு அந்த ட்ரீட்மென்ட், இந்த ட்ரீட்மென்ட் என அலையவில்லை. குழந்தையின் மழலைக்கான விஷயங்களை முழுமையாக அனுபவித்தேன்.
பிரபல நடிகையான மோகினி தன்னுடைய கல்யாண வாழ்க்கை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “கல்யாணம் முடிந்த உடன் நான் கர்ப்பம் தரித்து விட்டேன். அப்போது நான் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.
வாழ்க்கையில் நமக்கான அத்தியாவசிய இலக்குகள் என்னவெல்லாம் இருக்கிறதோ, அதை அந்தந்த காலக்கட்டத்தில் நிச்சயமாக அடைந்தே தீர வேண்டும். அதில் நான் மிகவும் கண்ணும், கருத்துமாக இருந்தேன்.
பணம்தான் முக்கியம், புகழ் தான் முக்கியம், படம்தான் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் எதுவும் என்னுடைய அகராதியிலேயே கிடையாது. நான் கர்ப்பம் ஆன பொழுது, மிக மிக சந்தோஷமாக இருந்தேன். அது சுகப்பிரசவமாகவும் அமைந்தது.
நான் மிகச் சிறிய வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டதால், என்னுடைய பிரசவம் அவ்வளவு இலகுவாக அமைந்தது. குழந்தைக்கு அந்த ட்ரீட்மென்ட், இந்த ட்ரீட்மென்ட் என அலையவில்லை. குழந்தையின் மழலைக்கான விஷயங்களை முழுமையாக அனுபவித்தேன்.
எனக்கு திருமணம் ஆகி தற்போது 25 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய மூத்த மகனுக்கு 24 வயது. இரண்டாவது மகனுக்கு 13 வயது. இரண்டாவது மகனை நான் கருவில் சுமக்கும் போது, எனக்கு 33 வயது. அந்த காலக்கட்டங்களில் நான் மிகவும் அவதிப்பட்டேன்.
அப்போதுதான் முதல் குழந்தை பெற்ற உடன் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. என்னுடைய கணவர் என்னை அந்த காலகட்டங்களில் மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்.
குழந்தை பெற்ற உடன், நான் உடல் எடை அதிகரித்தேன். அப்போது அவர், எனக்கு தொப்பை வந்து விட்டது. எடை கூடி விட்டாய். சாதாரணமாக வாழக்கூடிய லைஃப் ஸ்டைலில் இருந்து நகர்ந்து சென்று விட்டாய் என்றெல்லாம் சொன்னது கிடையாது. இரண்டு பிரசவத்தின் பொழுதும் நான் கிட்டதட்ட 20 கிலோ வரை எடை கூடியிருந்தேன்.
முதல் குழந்தை பெற்றவுடன் நான் அடிக்கடி அழுவேன். ன். என்னுடைய இரண்டு குழந்தைகளுக்குமே, நான் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.
தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள நன்மை என்னவென்றால், அது உங்களது உடல் எடையை குறைக்கும். உங்களுடைய ஹார்மோன்களையும், சமச்சீராக வைப்பதற்கு உதவும். ஆகையால் எந்த வயதில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டிருந்தாலும், இயற்கையான வழி என்னவோ அதை நீங்கள் பின்பற்றுங்கள்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்