தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இது முடிவில்லாத காதல்.. வருங்கால கணவரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்.. விரைவில் டும் டும் டும்..

இது முடிவில்லாத காதல்.. வருங்கால கணவரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்.. விரைவில் டும் டும் டும்..

Nov 27, 2024, 01:29 PM IST

google News
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் தன் காதலன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் தன் காதலன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் தன் காதலன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மலையாள நடிகை மேனகா, சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் இவர் பாலிவுட் சினிமா ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து கீர்த்தி சுரேஷ் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. உறவுக்காரர் ஒருவரை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

காதலை கன்ஃபார்ம் செய்த கீர்த்தி

இந்நிலையில், இன்று கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பை அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "15 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தததிற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடந்துகொண்டே இருக்கும். இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அவர் தன் காதலரை அறிவித்ததுடன், இதுவரை உலா வந்த வதந்திகளையும் முடித்து வைத்து திருமணத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.

பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட திருமணம்

முன்னதாக, பிரபல மலையாள ஊடகத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனது பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளவுள்ளாராம். இவரது திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கீர்த்தியின் திருமணம் பற்றி அவரது குடும்பத்தாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பலருக்கும் காத்திருக்கின்றனர். ஆனால் இதுபற்றி எந்த உறுதியான தகவலும் வெளியாகிவில்லை.

கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திகள்

கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாவது இது முதல் முறையல்லை. ஏற்கனவே, கேரளாவை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளபோவதாக வதந்திகள் வெளியாகின. அதன் பின்னர் பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் - கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மணமுடிக்க இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்தன.

அப்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதரமற்ற இதற்கு மறுப்பு தெரிவித்ததனர். அத்துடன் அவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்து வருவதாகவும், தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் கூறினர். தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்

இதற்கிடையே வரும் டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழன் ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளாராம். இவர்களின் திருமணம் டிசம்பரில் கோவாவில் உள்ள பிரபல சர்ச்சில் வைத்து நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தனது காதலர் கிறிஸ்தவர் என்பதால் திருமணத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷும் கிறிஸ்தவ மாதம் மாறுவது குறித்து உத்தேசித்து வருவதாக பிரபல இணையத்தளமான பிலிம்பிபீட் தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் கீரித்தி சுரேஷ் திருமணம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அவரது தரப்பிலும், குடும்பத்தார் தரப்பிலும் வெளிப்படுத்தவில்லை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி