Raghu Thatha movie review: வலிமை, சுதந்திரமான பெண்..ராஜ்ஜியம் நிகழ்த்திய கீர்த்தி சுரேஷ்..! ரகு தாத்தா படம் விமர்சனம்
Raghu Thatha movie review: வலிமை, புத்திசாலித்தனமான, சுதந்திரமான பெண்ணுடன் காமெடி கலந்த இனிமையான பயணமாக ரகு தாத்தா படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுமன் குமார். கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ரகு தாத்தா படம் விமர்சனம் இதோ
Raghu Thatha movie review: நடிப்பில் ராஜ்ஜியம் நிகழத்திய கீர்த்தி சுரேஷ்..ரகு தாத்தா படம் எப்படி இருக்கிறது?
Raghu Thatha movie review: தி பேமிலி மேன், கன்ஸ் அண்ட் குலாப்ஸ், போன்ற வெப் சீரிஸ்களின் எழுத்தாளரான சுமன் குமார், இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ரகு தாத்தா. அரசியல் காமெடி பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாகவும், அவரை சுற்றி இதர கதாபாத்திரங்களும் பின்னி பிணைந்து வருகின்றன.
ரகுவின் பேத்தி கயல் (கீர்த்தி சுரேஷ்) மற்றும் அவரது வாழ்க்கையைச் சுற்றியே கதை முழுவதுமாக சுழல்கிறது.
ரகு தாத்தா கதை
1960களின் பிற்பகுதியில்/1970களின் முற்பகுதியில், தமிழ்நாட்டில் இருக்கும் வள்ளுவன்பேட்டை என்ற சிறிய கிராமத்தின் பின்னணியில் கதை தொடங்குகிறது. அங்கு 25 வயதான கயல்விழி பாண்டியன் கிராமத்து பெண்ணாக மட்டுமல்லாமல் பட்டம் முடித்து, மெட்ராஸ் சென்ட்ரல் வங்கியில் வேலை செய்பவராக இருக்கிறார்.