பாலிவுட்டில் கவர்ச்சி புயலாக என்ட்ரி..வைரலாகும் விடியோ! மதம் மாறும் முடிவில் கீர்த்தி சுரேஷ்?
பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக என்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகை கீர்த்தி, திருமணத்துக்காக மதம் மாறும் முடிவில் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

பாலிவுட்டில் கவர்ச்சி புயலாக என்ட்ரி..மதம் மாறும் முடிவில் கீர்த்தி சுரேஷ்?
தமிழ், தெலுங்கு என தென்னிந்தியி சினிமாக்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை கீரித்தி சுரேஷ் பேபி ஜான் என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.
தமிழில் சூப்பர் ஹிட்டான தெறி ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கீர்த்தியின் கவர்ச்சி தரிசனம்
இதையடுத்து இந்த படத்தின் முதல் சிங்கிளாக 'நைன் மடாக்கா' என்ற பாடல் வெளியாகியுள்ளது. தமன் இசையமைப்பில் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீக்ஷிதா வெங்கடேசன் என்கிற தீ ஆகியோர் பாடியிருக்கும் இந்த பாடலில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி தரிசனத்தை காட்டியுள்ளார்.
