தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கணவருக்கு முத்தம்… காஜல் வீட்டில் என்ன விசேஷம்?

கணவருக்கு முத்தம்… காஜல் வீட்டில் என்ன விசேஷம்?

Aarthi V HT Tamil

Aug 17, 2022, 09:45 AM IST

காஜல் அகர்வால் தன் கணவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.
காஜல் அகர்வால் தன் கணவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

காஜல் அகர்வால் தன் கணவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

தமிழ் , தெலுங்கு மொழிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகையாக வலம் வருவபர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Pudhiya Geethai: ரசிகர்களின் ஃபேவரைட்.. விஜய்க்கு சர்ச்சையை ஆரம்பித்து வைத்த புதிய கீதை!

Ajith Kumar : அஜித்தின் விடாமுயற்சி தள்ளி போகிறதா... Good bad ugly முந்துகிறதா.. மீண்டும் வாலி 2 ல் அஜித்..!

HT Exclusive Interview: கண் தெரியாமல் அவதிப்பட்ட வடமாநில இளைஞர்.. அமைதியாக அஜித் பார்த்த மிகப்பெரிய விஷயம்!

43 Years of Vidiyum Varai Kaathiru: ஆண்டி ஹீரோவாக பாக்ராஜ்! பின்னணி இசையில் மிரட்டிய இளையராஜா - தமிழில் சிறந்த த்ரில்லர்

நட்சத்திர ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் .

காஜல் அகர்வாலுக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. நீல் என தனது குழந்தை பெயர் வைத்து இருக்கிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் தனது குழந்தையின் புகைப்படத்தை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

அதில் தன் கணவரின் கன்னத்தில் முத்தமிட்டவாறு, ”உலகில் சிறந்த அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விடுமுறையில் இருந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். முன்னதாக அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தான் அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார் காஜல். மேலும் அடுத்த மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.