விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை கஷ்டம்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டு.. ஈசியா இருப்பான்னு வருவாங்க..” - காயத்ரிரகுராம்
Oct 15, 2024, 08:04 AM IST
விவாகரத்து ஆன பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நடிகை காயத்ரி ஓப்பனாக பேசி இருக்கிறார்.
பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரிரகுராம் விவாகரத்தான பெண்களின் நிலை குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
விவாகரத்து தரும் வலிகள்
இது குறித்து அவர் பேசும் போது, “விவாகரத்து செய்த பெண் என்றால், சமூகத்தில் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு இருக்காது. அதுதான் உண்மை. ஒன்று, அவர்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பார்கள். இன்னொன்று, அவர்களை நாம் ஈசியாக தாக்கி விடலாம் என்ற நினைப்பு ஆண்கள் மத்தியில் நிலவும்.
இதில், அந்தப்பெண்ணின் கேரக்டர் பற்றிய அவதூறு பேச்சு உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும். அட்ஜஸ்மென்டை பொறுத்த வரை, அது சினிமாத்துறை மட்டுமல்ல. பல்வேறு துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. ஒரு பெண் விவாகரத்து செய்து விட்டு வந்து விட்டால், உடன் இருக்கும் நண்பர்களே அவளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் காப்பாற்றுவார்கள்.
ஆணாகவும், பெண்ணாகவும்
இன்னும் சில பெண்கள், தன்னுடைய கணவரை அந்த மாதிரியான பெண்களோடு பழகவிடமாட்டார்கள். எனக்கு அப்பா கூட கிடையாது. ஆகையால், என்னை நான் ஒரு பெண்ணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களது கேரக்டரை ஒருவர் அவதூறாக பேசினால் நீங்கள் வீக் ஆகி விடுவீர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அப்படி கிடையாது. நீங்கள் தைரியமாக இருக்கலாம். பார்க்கிறவர்கள் பார்வை தவறாக இருந்தால் அது அவர்களின் பிரச்சினை. அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது.
நமக்குள்ளும் நிறைய குழப்பங்கள் வரும். ஒரு பக்கம் துணை வேண்டும் என்று தோன்றும். இன்னொரு பக்கம் துணை வேண்டுமா என்று தோன்றும். இப்போதுதான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம். மீண்டும் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று நினைப்பு வரும். இதில் இரண்டாவது திருமணம் என்பது, சில பேருக்கு அமையும். சில பேருக்கு அமையாது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படிப்பட்டபெண்களை நான் செல்ஃப் கிங் என்று அழைப்பேன். நான் இனி கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன். நான் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடுவதற்கு கடவுள் இருக்கிறார்” என்று பேசினார்.
அண்மையில், தன்னுடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்து ஜெயம் ரவி பிரேக் அப் குறித்து கலாட்டா சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்திருந்தார். அது எங்கே இருக்க வாய்ப்பு?
அதில் அவர் பேசும் போது, “உங்களுக்கு வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரலாம். அது ரிலேஷன் சம்பந்தமான பிரச்சினையாக கூட இருக்கலாம். அப்படி வரும் பொழுது முதலில் அதிலிருந்து விலகி தனிமையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஏதோ ஒன்றை நீங்கள் குப்பைக்குள் தேட வேண்டும் என்றால், முதலில் அது எங்கே இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை குறித்த தெளிவு உங்களுக்கு வேண்டும்.
அது இல்லாமல் நாம் தேடிக்கொண்டே இருந்தால், கடைசி வரை நாம் தேடிக்கொண்டே தான் இருப்போம். ஆகையால், கொஞ்சம் தனியாக உட்கார்ந்து, நாம்தான் இந்தக் குப்பையில் அதனை போட்டோம். அது எங்கே இருக்க வாய்ப்பு இருக்கிறது?. எவ்வளவு அழுத்தத்தில் அதனை நாம் போட்டோம். அது மிக ஆழமாக உள்ளே சென்றிருக்குமா?.
மேலோட்டமாக கிடக்க வாய்ப்பு இருக்கிறதா இதையெல்லாம் நீங்கள் கேட்டுவிட்டு, நீங்கள் தேட ஆரம்பித்தால் உங்களுக்கு அழுத்தமே இருக்காது. வந்த உடனேயே நீங்கள் அதை எடுத்து விடுவீர்கள். நீங்கள் குப்பையையும் வைத்துக்கொண்டு, கிளறியும் கொண்டு, தேடிக் கொண்டே இருந்தால், எப்போது நீங்கள் தேடிய பொருளை பெறுவீர்கள். ஆகையால், ஒரு பிரேக் எடுங்கள்; அதைப் பற்றி யோசிங்கள். தெளிவை உண்டாக்குங்கள். முதலில் உங்களது மனதில் அது எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிங்கள் அதன் பின்னர் தேடுங்கள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்