Suja Raguram: 12 -ம் வகுப்பு பப்பி காதல்.. தூது போன காயத்ரிரகுராம்.. உடனே ஓகே சொன்ன அப்பா! - சுஜாரகுராம் ஷேரிங்ஸ்!
காயத்ரி ரகுராமின் அக்காவான சுஜாரகுராமின் சுவாரசிய காதல் கதை இங்கே!
(1 / 5)
பிரபல நடன இயக்குநரான ரகுராமின் மூத்த மகள்தான் சுஜா ரகுராம். இவரது தங்கைதான் நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரிரகுராம். சுஜா ரகுராம், தொழிலதிபர் வேணுகோபாலை இளவயதிலேயே கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.அவர்களின் காதல் கதையை, கலாட்டா யூடியூப் சேனலில் சுஜாரகுராமின் பகிர்ந்தார்.
(2 / 5)
சுஜா ரகுராம் பேசும் போது, “12 வகுப்பு முடித்த உடனேயே எனக்கும் அவருக்கு காதல் உருவானது. நிகழ்ச்சி ஒன்றில்தான் அவரை நான் சந்தித்தேன். அவரை பார்த்த உடன், முதலில் காயத்ரியிடம் விஷயத்தை சொன்னேன். அவளிடம் , ‘காயத்ரி நிகழ்ச்சியில் ஒரு பையனை பார்த்தேன். அவன் என்னை பார்த்து மிகவும் பிடித்து இருக்கிறது என்றான். நான் அவனிடம், எங்கள் அப்பாவிடம் வந்து பேசுங்கள். அவர் ஓகே என்று சொன்னால், எனக்கு ஓகேதான் என்று சொல்லி விட்டு வந்தேன்’ என்று சொன்னேன்.
(4 / 5)
எங்களுடைய காதல், நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்து, நன்றாக புரிந்து கொண்டு வந்தது அல்ல. நிறைய பேரால் இதனை நம்ப முடியாது. எங்களுடைய காதல் பார்த்த மாத்திரத்திலேயே வந்தது.
மற்ற கேலரிக்கள்