தொடங்கியது இரண்டாவது வார நாமினேஷன்! ஆண்களா? பெண்களா? ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இரண்டாவது வார நாமினேஷன் இன்று நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற விரும்பும் போட்டியாளர்களை நாமினேட் செய்து உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் மற்ற 7 சீசன்களையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என புதிய தொகுப்பாளர் முதல் புதிய விதிமுறைகள், புதிய வீடு என அனைத்திலும் புதிய நடவடிக்கைகளை இந்த சீசன் பிக்பாஸ் கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த சீசன் தொடங்கிய போது மொத்தம் 18 போட்டியாளர்களோடு தொடங்கியது.
பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கலவரத்திற்கும், கண்டெண்ட்டிற்கும பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மற்ற எந்த சீசனிலும் இல்லாத வகையில் பல விதமான புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. போட்டியாளர்கள் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி எனப் பிரிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் நேற்றோடு முடிந்த நிலையில், இரண்டாவது வார தொடங்கியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இரண்டாவது வார நாமினேஷன் இன்று நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற விரும்பும் போட்டியாளர்களை நாமினேட் செய்து உள்ளனர்.
எலிமேனேட் ஆன ரவீந்தர்
நேற்றைய எபிசோட்டில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியளாரையும் சரமாரியாக கேள்வி கேட்டு குழப்பமடைய செய்தார். யார் மாற்றி பேசினாலும் அவர்களுக்கு முகத்திற்கு நேராகவே அவர்களது தவறை சுட்டிக்காட்டினார். மேலும் முதல் வார முடிவில் நடந்த அணைத்து களேபரங்களையும் விசாரித்தார். இந்த பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து தானே தவிர தொகுப்பாளரான என்னை வைத்து இல்லை எனக் கூறினார்.