தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘25 பேர் இருக்கும்.. கதவை பூட்டி பாய்ந்தார்கள்.. அக்கா சேலையை.. கடித்து விட்டு ஓடினோம்’ சார்மிளா அதிர்ச்சி பேட்டி!

‘25 பேர் இருக்கும்.. கதவை பூட்டி பாய்ந்தார்கள்.. அக்கா சேலையை.. கடித்து விட்டு ஓடினோம்’ சார்மிளா அதிர்ச்சி பேட்டி!

HT Tamil HT Tamil

Sep 03, 2024, 09:08 AM IST

google News
Actress Charmila : ‘‘பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் மலையாள சினிமாவில் அப்படியில்லை. அரபு நாட்டு பணத்தில் படம் எடுக்க வரும் புதிய புதிய சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டார்கள். எனக்கு தெரிந்து எந்த நடிகரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை’’
Actress Charmila : ‘‘பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் மலையாள சினிமாவில் அப்படியில்லை. அரபு நாட்டு பணத்தில் படம் எடுக்க வரும் புதிய புதிய சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டார்கள். எனக்கு தெரிந்து எந்த நடிகரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை’’

Actress Charmila : ‘‘பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் மலையாள சினிமாவில் அப்படியில்லை. அரபு நாட்டு பணத்தில் படம் எடுக்க வரும் புதிய புதிய சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டார்கள். எனக்கு தெரிந்து எந்த நடிகரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை’’

கேரளாவில் நடிகைகள் மீதான பாலியல் தொல்லை குறித்து தமிழ் நடிகையான சார்மிளா, சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பகீர் பேட்டி இதோ: கேரள சினிமாவில் மட்டும் தான் எனக்கு பாலியல் சீண்டல் பிரச்சினைகள் வந்திருக்கிறது. அங்கு தான் நான் நிறைய படங்கள் பண்ணேன். பெரும்பாலானோர் வெளிப்படையாகவே ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்யச் சொல்லி கேட்பார்கள். நான் அதனாலேயே பல படங்கள் பண்ணாமல் வந்திருக்கிறேன். உதவி இயக்குனர்கள் அல்லது மேனேஜர்கள் மூலமாக அதற்கான அழைப்பு வரும். இயக்குனருக்கு வேண்டும், தயாரிப்பாளருக்கு வேண்டும் என்று ஓப்பனாக கேட்பார்கள். நான் வெளியே வந்துவிடுவேன்.

பொள்ளாச்சியில் நடந்த பயங்கர சம்பவம்

காலம் மாறி போச்சு படம் மலையாளத்தில் ரீ மேக் பண்ணார்கள். முழு படம் முடியும் வரை எதுவும் ஆகவில்லை. பொள்ளாச்சியில் கடைசி நாள் ஷூட்டிங் நடந்தது. ஷூட் முடிந்து போகும் போது, தயாரிப்பாளர் அறையில் இருக்கிறார், அவரை போய் சந்தியுங்கள் என்றார். என் உதவியாளர் துர்கா அக்கா உடன் அங்கு போனேன். அங்கு போனால், எல்லாரும் போதையில் இருந்தனர். உடனே கதவை பூட்டி விட்டு, துர்கா அக்கா மீது பாய்ந்தார்கள். அவரின் சேலையை அவிழ்த்தார்கள். அதே நேரத்தில் என்னிடமும் அப்ரோச் செய்தார்கள். தயாரிப்பாளரோடு சேர்த்து அவருடைய நண்பர்கள் 8 பேர் இருந்தார்கள்.

என்னுடைய இன்னொரு உதவியாளர் லெட்சுமணன், தடுக்க முயற்சித்த போது, அவரை அடித்தனர். துர்கா அக்கா, ஒருவரின் கையை கடித்துவிட்டு அங்கிருந்து ஓடினார். அங்குள்ள வேண்டியவர் ஒருவர் மூலமாக, உதவியைப் பெற்ற அந்த சம்பவத்தில் தப்பித்தோம். அந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தோம். குடும்ப ஆதரவு இருக்கும் எனக்கே இந்த நிலை என்றால், கிராமங்களில் இருந்து வரும் பெண்களின் நிலை படுமோசம். தந்தையே, தாயே அழைத்துச் சென்று விடுவதை பார்த்திருக்கிறேன்.

பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் மலையாள சினிமாவில் அப்படியில்லை. அரபு நாட்டு பணத்தில் படம் எடுக்க வரும் புதிய புதிய சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டார்கள். எனக்கு தெரிந்து எந்த நடிகரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை. தயாரிப்பாளர்கள் தான் அதிகம் அப்ரோச் செய்தார்கள். சில இயக்குனர்கள் கேட்டார்கள். 25 பேரிடம் நான் மறுப்பு தெரிவித்து, 25 படங்களின் வாய்ப்புகளை நான் இழந்திருக்கிறேன்.

ஒத்துழைக்காவிட்டால் என்ன நடக்கும்?

அவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால், அந்த படத்தில் கட்டாயம் நடிக்க முடியாது. முன்னாடியே கூறிவிட்டார்கள் என்றால் பிரச்னை இல்லை, நாம் ஒதுங்கிவிடலாம். படம் போகும் போது, வந்தால் தான் பயங்கர கஷ்டம். சில பேர் நம்மிடம் அப்ரோச் செய்வதே, நமக்கு ஏதோ நன்மை செய்வதைப் போல இருக்கும். ‘நான் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன், உங்களிடம் தான் இப்படி தோன்றியிருக்கு’ என்று உருகி பேசுவார்கள். ஒரு தயாரிப்பாளர் மீது நான் புகார் செய்ததால், 6 மாதங்கள் எனக்கு அங்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. அந்த கேப்பில் தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தேன். அதன் பின் நடிக்க அழைத்தார்கள், என்று அந்த பேட்டியில் சார்மிளா தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா தொடர்பான செய்திகளுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் எங்களை பின்தொடரலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி