தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sj Surya: முதல் முறையாக மலையாளத்தில் எஸ்.ஜே.சூர்யா! ஒரே படத்தில் இணையும் நடிப்பு அரக்கன், நடிப்பு ராட்சசன் - முழு விவரம்

SJ Surya: முதல் முறையாக மலையாளத்தில் எஸ்.ஜே.சூர்யா! ஒரே படத்தில் இணையும் நடிப்பு அரக்கன், நடிப்பு ராட்சசன் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 06, 2024 04:59 PM IST

மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளாராம். இதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.

ஒரே படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா - ஃபகத் பாசில்
ஒரே படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா - ஃபகத் பாசில்

ட்ரெண்டிங் செய்திகள்

நியூ படம் மூலம் நடிகராக உருவெடுத்தார் எஸ்.ஜே. சூர்யா. இதைத்தொடர்ந்து தற்போது முழு நேர நடிகராக மாறி ஹீரோ, வில்லன், குணச்சித்தரம் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பு அரக்கன்

எஸ்.ஜே. சூர்யாவை நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது அற்புத நடிப்பால் உயிர்கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் வில்லன், காமெடி கதாபாத்திரத்தில் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எமோஷலான கதாபாத்திரத்தில் தோன்றி கிளாப்ஸ்களை அள்ளினார்.

மலையாளத்தில் அறிமுகம்

தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, முதல் முதல் முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

விபின் தாஸ் இயக்கத்தில், ஃபகத் பாசில் நடிக்கும் படத்தில் இலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

விபின் தாஸ் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படத்தை இயக்கியிருந்தார். மலையாள சினிமா ஹீரோவான ஃபகத் பாசிலுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை நடிப்பு ராட்சசன் என்றும் அழைக்கிறார்கள்.

தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. இதையடுத்து ஃபகத் பாசில் - எஸ்.ஜே. சூர்யா இணையும் படம் உண்மையாக இருந்தால் ரசிகர்களின் இரண்டு பேரவிட் நடிகர்கள் முதல் முறையாக இணைவார்கள். இதற்கிடையே எஸ்.ஜே. சூர்யா மலையாள படத்தில் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடிக்க இருக்கும் தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஜினி படத்தில் ஃபகத் பாசில்

கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்திருந்தார் மலையாள நடிகர் ஃபகத் பாசில். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மாரீசன் என்ற தமிழ் படத்தில் ஃபகத் பாசில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து பெரிய படங்களில் எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இந்த ஆண்டில் இந்தியன் 2, கேம் சேஞ்சர், ராயன், லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய படங்கள் வெளியாகும் என தெரிகிறது. இது தவிர தெலுங்கில் நானி நடித்து வரும் சரிபோதா சனிவாரம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அத்துடன் விக்ரம் நடித்து புதிய படமான சியான்62 படத்திலும் கமிட்டாகி உள்ளார். எனவே எஸ்.ஜே. சூர்யாவின் லைன் அப்பில் வரிசை கட்ட படங்கள் வர இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்