தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Unni Mukundan: மிரட்டல் லுக்கில் உன்னி முகுந்தன்.. வைரல் ஆகும் மார்கோ படத்தில் செகண்ட் லுக்!

Unni Mukundan: மிரட்டல் லுக்கில் உன்னி முகுந்தன்.. வைரல் ஆகும் மார்கோ படத்தில் செகண்ட் லுக்!

Marimuthu M HT Tamil

Sep 24, 2024, 07:54 PM IST

google News
Unni Mukundan: மிரட்டல் லுக்கில் உன்னி முகுந்தன்.. வைரல் ஆகும் மார்கோ படத்தில் செகண்ட் லுக் குறித்துப் பார்ப்போம்.
Unni Mukundan: மிரட்டல் லுக்கில் உன்னி முகுந்தன்.. வைரல் ஆகும் மார்கோ படத்தில் செகண்ட் லுக் குறித்துப் பார்ப்போம்.

Unni Mukundan: மிரட்டல் லுக்கில் உன்னி முகுந்தன்.. வைரல் ஆகும் மார்கோ படத்தில் செகண்ட் லுக் குறித்துப் பார்ப்போம்.

Unni Mukundan: சமீபத்தில் வெளியான உன்னி முகுந்தனின் 'மார்கோ' படத்தின் 2ஆவது போஸ்டர் வைரல் ஆகிறது.

தமிழில் ‘கருடன்’ படத்தில் நடித்ததன்மூலம் உன்னி முகுந்தன் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் நடிகராக மாறியுள்ளார்.

இந்நிலையில் அவர் ‘மார்கோ’ திரைப்படத்தில் கொடூரமான மற்றும் இரக்கமற்ற வில்லனாக நடித்து வருகிறார்.

க்யூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மார்கோ' படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஹனீப் அடேனி என்பவர், ‘மார்கோ’ படத்தை இயக்கி உள்ளார். படம் முழுக்க வன்முறை மற்றும் ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளன.

இப்படத்தில் அன்சன் பால், அபிமன்யு திலகன், அஜித் கோஷி, இஷான் ஷௌகத், மேத்யூ வர்கீஸ், ஜெகதீஷ், சித்திக், கபீர் துஹான் சிங், யுக்தி தரேஜா மற்றும் துர்வா தாக்கர் ஆகிய மலையாள நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் மார்கோ:

இந்த படம் பான்-இந்திய திரைப்படங்களுக்கு ஒரு புதிய அளவுகோலை ’மார்கோ’ திரைப்படம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவும்; ஷமீர் முஹம்மது எடிட்டிங்கையும் செய்திருக்கிறார். மேலும், ரவி பஸ்ரூர் இசையையும்; கலையை கிங்சன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியையும் செய்துள்ளனர்.

மார்கோ படத்தின் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதில் உன்னி முகுந்தனின் லுக் மிரட்டலாக உள்ளது.

யார் இந்த முன்னி முகுந்தன்?:

கேரள மாநிலம், திருச்சூரில் மடத்திபரம்பில் முகுந்தன் நாயர் மற்றும் ரோஜி முகுந்தன் என்னும் மலையாளம் பேசும் தம்பதியருக்கு, 1987ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி மகனாகப் பிறந்தவர் தான், உன்னி முகுந்தன்.

உன்னி முகுந்தன் தன் சிறு வயதில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வளர்ந்தார். அதனால், அகமாதாபாத்தில் உள்ள பிரகதி மேல்நிலைப்பள்ளியில் தான் அவரது படிப்பும் இருந்தது. அதன்பின், கல்லூரி படிப்பதற்காக ஊர் திரும்பும் உன்னி முகுந்தன்,திருச்சூர் அருகிலுள்ள பிரஜோதி நிகேதன் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் இதழியலும் படிக்கின்றார். படித்தமுடித்த உடன் ஆரம்பத்தில் டி.டி.இ.சி என்னும் அமெரிக்க ஆயுள் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மையப் பணிகளைப் பார்த்தார்.

முதல் படமே உன்னி முகுந்தனுக்கு தமிழ்ப்படம் தான்

2011ஆம் ஆண்டு, உன்னி முகுந்தன், தமிழில் சீடன் என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், மலையாளத்தில் பாம்பே மார்ச் 12 என்னும் படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின்மூலம் மலையாளத்தின் உச்ச நடிகரான மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்தார். இப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த புதுவரவு நடிகர் என்னும் சைமா விருதினை வென்றார். அதன்பின், மலையாள இயக்குநர் டி.கே.ராஜிவ் குமார் இயக்கிய தல்சமயம் ஒரு பெண்குட்டி என்னும் படத்தில் நடித்தார்.

உன்னி முகுந்தனின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால், அது மலையாள இயக்குநர் விஷாக் இயக்கிய மல்லு சிங் எனலாம். இப்படம் கேரளாவில் 100 நாட்கள் ஓடியது.

2015ஆம் ஆண்டு, உன்னி முகுந்தனுக்கு நிறைய நல்ல படங்கள் கிடைத்த வருடம் எனலாம். இந்த ஆண்டு தீபு கருணாகரன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ஃபயர் மேன் திரைப்படத்தில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்தார். அதே வருடத்தில் இயக்குநர் பேரரசு இயக்கிய மலையாளப் படமான சாம்ராஜ்யம் 2: சன் ஆஃப் அலெக்ஸாண்டர் படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து இயக்குநர் முஷின் பராரி இயக்கத்தில் கே.எல்.10 பத்து என்னும் படத்தில் நடித்தார்.

2022ஆம் ஆண்டு, மாளிகைப்புரம் என்று இவர் நடித்த படம் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஹிட்டானது. சமீபத்தில் இவர் சூரி, சசிகுமாருடன் இணைந்து நடித்த ‘கருடன்’திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி