தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marco First Look: கருடன் படம் மூலம் கொடுத்த வெற்றி.. அடுத்த ஆட்டம் ஆட தயாரான உன்னி முகுந்தன்

Marco first Look: கருடன் படம் மூலம் கொடுத்த வெற்றி.. அடுத்த ஆட்டம் ஆட தயாரான உன்னி முகுந்தன்

Aarthi Balaji HT Tamil
Jun 16, 2024 01:57 PM IST

Marco first Look: கருடன் படம் மூலம் ஹிட் கொடுத்த உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Marco first Look: அடுத்த ஆட்டம் ஆட தயாரான உன்னி முகுந்தன்
Marco first Look: அடுத்த ஆட்டம் ஆட தயாரான உன்னி முகுந்தன்

ட்ரெண்டிங் செய்திகள்

மலையாள திரையுலகில் தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் உன்னி முகுந்தன். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உன்னி முகுந்தன் நடிக்கும் ஒவ்வொரு புதிய படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

ரசிகர்களை தாண்டி அனைத்து திரையுலகினரும் காத்திருக்கும் படம் உன்னி முகுந்தன் - ஹனிஃப் அடேனி கூட்டணியில் உருவாகும் 'மார்கோ'. க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், ஷெரீப் முஹம்மது மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் இணைந்து 'மார்கோ' படத்தை தயாரிக்கின்றனர். 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக 'மார்கோ' உருவாகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ' மார்கோ ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடுதல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் மார்கோ படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

எதிர்பார்ப்பு அதிகம்

மார்கோ படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. காரணம் இந்த கூட்டணியின் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். ஹனிஃப் அடேனி இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்க, மேலும் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மல்லிகாபுரம், கருடன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் 'மார்கோ' படத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு சிறந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் இல்லாமல், ஐந்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ஒரு எட்ஜ் ஆஃப் தி சீட் ஆக்‌ஷன் த்ரில்லரை மார்கோ கொண்டுள்ளது. 

வெறித்தனமான ஆக்சன் காட்சிகள்

அனிமல் படத்தை போலவே வெறித்தனமான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீப காலங்களில் மலையாளத்தில் இதுபோன்ற ஆக்சன் காட்சிகள் வெளியாகவில்லை. கலகிங் சன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் சிறந்த அதிரடி ஆக்சன் இயக்குனர்களால் ஆக்‌ஷன் காட்சிகள் கையாளப்பட்டுள்ளன. மார்கோ படம் பான்-இந்திய அளவில் வெளியாக உள்ளது.

மார்கோ குழு

கூடுதல் சிறப்பம்சமாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமான ‘கேஜிஎஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மார்கோ படத்துக்கு இசையமைக்கிறார். ரவி பஸ்ரூர் முதன்முறையாக இசையமைக்கும் மலையாளப் படம் மார்கோ. மேலும் மலையாளத்தில் முதல் வில்லன் ஸ்பின் ஆஃப் படம் என்ற பெருமை மார்கோவின் மற்றொரு சிறப்பு. 

உன்னி முகுந்தனுடன் மார்கோ படத்தில் சித்திக், ஜெகதீஷ், அன்சன் பால், கபீர் துஹான்சிங் மற்றும் அபிமன்யு திலகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரதி தரேஜா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் சில புதுமுகங்களும் நடித்துள்ளனர். தொழில்துறை ஜாம்பவான்களான க்யூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த முதல் படம் மார்கோ.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப்  குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.