தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தலைவர் விஜய் பேசி முடிச்சதும் பாருங்க.. 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும்.. உறுதியாய் சொன்ன தாடி பாலாஜி

தலைவர் விஜய் பேசி முடிச்சதும் பாருங்க.. 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும்.. உறுதியாய் சொன்ன தாடி பாலாஜி

Marimuthu M HT Tamil

Oct 13, 2024, 05:01 PM IST

google News
தலைவர் விஜய் பேசி முடிச்சதும் பாருங்க என்றும், 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும் எனவும் உறுதியாய் சொன்ன நடிகர் தாடி பாலாஜியின் கருத்து வைரல் ஆகியுள்ளது.
தலைவர் விஜய் பேசி முடிச்சதும் பாருங்க என்றும், 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும் எனவும் உறுதியாய் சொன்ன நடிகர் தாடி பாலாஜியின் கருத்து வைரல் ஆகியுள்ளது.

தலைவர் விஜய் பேசி முடிச்சதும் பாருங்க என்றும், 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும் எனவும் உறுதியாய் சொன்ன நடிகர் தாடி பாலாஜியின் கருத்து வைரல் ஆகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசி முடித்ததும் பாருங்க எனவும், 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும் என்றும் நடிகரும் த.வெ.க உறுப்பினருமான தாடி பாலாஜி பேசியுள்ளார்.

திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடக்கும் முதல் மாநாட்டுக்கு பழம், குங்குமம் வைத்து மார்க்கெட் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோக்காரர்களை அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் தாடி பாலாஜி கூறுகையில், ‘’இன்றைக்கு திருநெல்வேலி மற்றும் மார்க்கெட் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அழைக்கிறோம். எனக்கு புது அனுபவம். ஒரு மாநாட்டுக்கு வீட்டில் நடக்கும் விழா போல், பழம், சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்கிறோம். இதிலேயே தொண்டர்களைத் தாண்டி, பொதுமக்கள் பலரும் விஜய் 2026ல் வரவேண்டும் என்று பலரும் விருப்பப்படுகிறார்கள். அதுதான் பெரிய மாறுதல். தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகள் மிகச் சிறப்பாக நடக்கிறது. நான் போய்ப் பார்த்தேன்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் இடத்துக்கு தினமும் வரும் பல நூறுபேர் - தாடி பாலாஜி!

தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அண்ணன் அங்கேயே இருந்து வேலை பார்க்கிறாங்க. நம் தமிழக வெற்றிக் கழக கட்சியின் நிர்வாகிகள் அத்தனை பேரும் அங்கு இருக்கிறார்கள். தினமும் 200 மற்றும் முந்நூறு பேர் எதுவும் வேலை செய்யவேண்டுமா என வந்து கேட்டுவிட்டு போய்க்கொண்டு தான் இருக்காங்க. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனைவரும் தன்னுடைய வீட்டில் நடைபெறும் விழா போல் நினைத்துப் பணியாற்றி வருகிறார்கள்.

நிறையபேர் எதிர்தரப்பில் வந்திட்டு தான் இருக்காங்க. கொடிக்கம்பத்தில் இருக்கும் கயிறு போல, எங்களை விமர்சிக்கிறவங்க எல்லாம் கீழே போய்ட்டு இருக்காங்க. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மேலே போய்க்கொண்டே இருக்கிறது. கண்டிப்பாக, அக்டோபர் 27ஆம் தேதி முதல் மாநாட்டில் தலைவர் விஜய் பேசி முடித்ததும் தெரியும் என்ன நடக்கும் என்று. அன்று முதல் எங்களது கட்சிப்பணி 2026-ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி நகரும். எல்லோரும் தமிழக வெற்றிக் கழகத்துக்காக பணியாற்றத் தயாராக இருக்கோம். கண்டிப்பாக, இரவும் பகலும் தமிழக வெற்றிக் கழகத்துக்காக உழைப்போம். 2026ல் பறக்கப்போவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான்(சிரிக்கிறார்).

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அக்டோபர் 27ல் தான் தீபாவளி - தாடி பாலாஜி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கும் தேதியில், நம்ம விழா முடிந்ததும் அடுத்தடுத்து விஷேசங்கள் வருது. தீபாவளி வரும் அக்டோபர் 31ஆம் தேதி வருவதைப் பலர், அக்டோபர் 27ஆம் தேதியே வருவது போல் உணர்கின்றனர்.

அப்படி ஒரு உற்சாகம் இருக்கு. நிறைய மாநாடுகள் பார்த்து இருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் மிகப்பெரிய வெற்றி என்னவென்றால், என்ன நடக்கும் மற்றும் எப்படி நடக்கும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

கண்டிப்பாகவே இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அன்றைக்கு பார்த்தீங்கன்னா எளியவர் முதல் நம்மை எதிர்ப்பவர்கள் வரை, அனைவரும் டிவி முன்னாடி தான் உட்கார்ந்து இருப்பாங்க. தலைவர் மேடையில் ஏறி பேசுறது எங்களுக்கே சர்ப்ரைஸாக தான் இருக்கும். அவர் மேடையில் ஏறி என் நெஞ்சில் குடியிருக்கும் சொன்னாலே முடிஞ்சிடுச்சு. நான் தலைவர் கூட பயணிச்சவன். இருந்தாலும் சார் என்னப் பேசுவார் அப்படின்னு நினைக்கும்போது, எனக்கே சர்ப்ரைஸாகத் தான் இருக்குது.

நிறையபேர் எதிர்பார்க்குறாங்க. எந்த தலைவர் என் தோளை செருப்பு போடுவேன்னு சொல்லியிருக்கார். அப்படியெல்லாம் ஒன்னுமே இல்லை. நிறைய பேருக்கு வாக்களிக்கும்போது நமக்கு கருப்பு மையை, நம் கையில் வைக்கிறாங்க. 2024-ல் இந்த புள்ளி(நடிகர் விஜய்) மற்ற எல்லோருக்கும் முற்றுப்புள்ளி தான்.

நம்மளை ஏதாவது சொல்லணும்னே இருப்பாங்க. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வருவதும் போவதும் ரொம்ப கவனமாகவே வரணும். கவனமாகவே போகணும். நாம் கூட்டத்தில் ரொம்ப கட்டுப்பாடாகத் தான் இருக்கணும். நம்ம பசங்க அப்படி செய்ய மாட்டாங்க. தலைவர் விஜய் கையை காட்டினால் ஆஃப் ஆகிடுவாங்க'' என நடிகர் தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை