தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Nassar's Son Faizal Joind Tamizhaga Vetri Kazhagam

Vijay's TVK Party: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நடிகர் நாசரின் மகன் ஃபைசல்!

Karthikeyan S HT Tamil
Mar 13, 2024 11:48 AM IST

Tamizhaga Vetri Kazhagam: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
நடிகர் நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

கட்சி தொடங்கப்பட்டு விட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டமன்ற தேர்தல் என்பதும் தெளிவாக தெரிகிறது.

மக்களவைத் தேர்தலைச் சந்திக்காவிட்டாலும் தற்போது கட்சியின் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக மகளிர் தலைமையில் புதிய அணியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உருவாக்கி உள்ளார். உறுப்பினர் சேர்க்கை மாநிலச் செயலாளராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சி.விஜயலட்சுமி, மாநில இணை செயலாளராக கடலூர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தஎஸ்.என்.யாஸ்மின், மாநிலப் பொருளாளராக கோவை மாவட்டம் கணபதியைச் சேர்ந்த வி.சம்பத்குமார், துணை செயலாளர்களாக மதுரையைச் சேர்ந்த ஏ.விஜய் அன்பன்கல்லனை, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.எல்.பிரபு ஆகியோரை நிர்வாகிகளாக விஜய் நியமித்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கைக்காக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் உறுப்பினர் சேர்க்கை கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி மூன்றே நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அந்த அணியினர் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ஏற்கெனவே நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. இதற்காக நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 'சைவம்' திரைப்படத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணியாற்றிய ஃபைசல், நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஈசிஆரில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கிய ஃபைசலுக்கு அவரது வீட்டுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த சூழலில் தான் தனது விருப்ப நடிகர் விஜய், அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் அவரது கட்சியில் ஃபைசல் இணைந்துள்ளார். நாசர் மனைவி கமீலா நாசர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதனைப் பகிர்ந்து வெளிஉலகத்திற்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகம் செய்து வைத்து நடிகர் விஜய் காணொலி மூலம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்துவிட்டேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீடைப் பயன்படுத்தி சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்." என்று கூறியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்