Actor Seshu: லொள்ளு சபா புகழ் நடிகர் சேஷூவுக்கு மாரடைப்பு - தற்போதைய நிலை என்ன தெரியுமா?
Mar 15, 2024, 07:06 PM IST
Actor Seshu: நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Actor Seshu: விஜய் டிவியில் லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் ஆனவர், நடிகர் சேஷூ. அதிலும் குறிப்பாக பாரதி ராஜாவின் மண்வாசனை என்னும் திரைப்படத்தை காமெடியாக மாற்றி கலாய்த்து தள்ளியிருப்பார்கள். அதில், காந்திமதி நடித்த ஒச்சாயி கிழவி வேடத்தில் நடித்து, அவரைப்போல கலாய்த்து பழமொழி சொல்லி பிரபலம் ஆனவர், நடிகர் சேஷூ.
அதிலும் மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன?, குடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கிப் போட்டானாம் எடைக்கி போட்ட பாட்டிலை தூக்கி குடிச்சி போட்டானாம் அந்த மாதிரியில இருக்கு என்று இவர் செய்த அலப்பறைகள் பலரையும் பல ஆண்டுகளாக நினைவுகூர வைத்து சிரிக்க வைத்தன.
அதன்பின்,சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக,2002ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி, வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், குலு குலு, பெஸ்ட்டி, கடமையைச் செய், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சரக்கு, வடக்குபட்டி ராமசாமி ஆகியப் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் நடித்திருந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
இந்நிலையில் தான், மாரடைப்புக் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் நடிகர் சேஷூ சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்துவருகின்றனர். அதில், சரத் பாபு, மனோ பாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, ஜூனியர் பாலையா, டி.பி.கஜேந்திரன், போண்டாமணி, விஜயகாந்த் ஆகியோரின் இறப்பு, ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாதவை. அதில் பலர் மாரடைப்புக் காரணமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரடைப்பின் அறிகுறிகள் என்ன?
மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஆகியவை மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம் என டாக்டர் பாரத் குக்ரெட்டி கூறுகிறார். அதன் அறிகுறிகள் ஆவன:-
1- மார்பு அழுத்தம் அல்லது இறுக்கம்
2- மார்பு, முதுகு, தாடை மற்றும் பிறமேல் உடல் பகுதிகளில் அசௌகரியம் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்
3- குமட்டல்
4- வாந்தி
5- கவலை
6- மூச்சுத் திணறல்
7- வியர்த்தல்
8- இதயத் துடிப்பு
9- திடீர் நினைவு இழப்பு
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளின் அதே தீவிரம் இல்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மார்பு வலி இருப்பதாக தெரிவிக்கும் மிகவும் பொதுவான அறிகுறி மார்பு வலி. ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் "வழக்கத்திற்கு மாறான" அறிகுறிகளை அதிகம் அனுபவிக்க வாய்ப்புள்ளது:
1- சுவாசக் கஷ்டங்கள், தாடை வலி மற்றும் மேல் முதுகுவலி
2- தலைச்சுற்றல்
3- உடம்பு சரியில்லை மற்றும் வாந்தி
கடுமையான மாரடைப்பு: இது எதனால் ஏற்படுகிறது?
இதுகுறித்து டாக்டர் பாரத் குக்ரெட்டி கூறுகையில், "இதய தசைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் அடைக்கப்படும்போது கடுமையான மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் சரியாக செயல்பட தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்ய இந்த தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம்’’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://www.facebook.com/HTTamilNews
Google News: https://bit.ly/3onGqm9