தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான்.. சரத்குமார்

அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான்.. சரத்குமார்

Marimuthu M HT Tamil

Nov 15, 2024, 09:13 PM IST

google News
அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான் என சரத்குமார் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான் என சரத்குமார் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான் என சரத்குமார் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான் என்றும்; அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான் என்றும் நடிகரும் பாஜகவைச் சார்ந்தவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் சரத் குமாரின் ஆதரவாளர்களுக்கான சமத்துவ விருந்து சென்னையில் இன்று நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சரத் குமார் பேசுகையில், ‘’ சில மாதங்களுக்கு முன் எங்களது கட்சியை பாஜகவுடன் இணைத்தாலும், எங்களது ஆதரவாளர்களை தீபாவளி கழித்து மீண்டும் சந்தித்து உற்சாகப்படுத்தியிருக்கிறேன். எப்படி, பாஜக ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி தான் இன்றைய நிகழ்ச்சி.

தனது தாயிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பதால், இளைஞர் ஒருவர் ஆயுதத்தை எடுத்து மருத்துவரைத் தாக்கியிருப்பதை ஏற்கமுடியாது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்து என்ன செய்திருக்கிறார் என்று சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.

விஜய் வந்து அரசியலுக்கு வருகை தந்ததை முன்னரே வரவேற்றுவிட்டேன். மக்களுக்கு சேவை செய்ய கட்சி ஆரம்பித்தது வரவேற்கத்தக்கது தான்.

விஜய்யை உடனடியாக விமர்சிக்க முடியாது - சரத் குமார்

விஜய்யின் கொள்கைகளை வைத்து உடனடியாக விமர்சித்துவிடமுடியாது. என்ன திட்டங்கள் வைத்துள்ளார். அந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப்படுத்துவார் என்பது போக போகத்தான் தெரியும். அவரை ஊடகங்கள் தான் வளர்த்துவிடுறீங்க.

விஜய்யாக பல்வேறு கூட்டங்கள் நடத்தி, வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பத்திரிகையாளரிடம் பேசினால் தான், அவரைப் பற்றி பேச முடியும். ஆனால், பெரும்பாலானோர் அவரது கட்சியை விமர்சித்து அரசியல் செய்வதைக் காட்டிலும், மக்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கிறேன்.

விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே, தேர்தல் வியூகம் அமைத்து செயல்படுவதுபோல், நாங்களும் ஹெச். ராஜா தலைமையில் குழு அமைத்து 14 மாதங்களில் பாஜக ஆட்சியைக் கொண்டு வர முயற்சிப்போம். இது விஜய் கட்சி ஆரம்பித்ததால் அல்ல. கட்சிக்கு சில பணிகள் இருக்கிறது. பயணம் இருக்கணும். பரப்புரை இருக்கணும். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் இருக்கணும். அதனை விஜய் கட்சி ஆரம்பித்ததால் மட்டுமல்ல, எல்லா கட்சியினரும் செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.

காமராஜரை கடைசிக்காலத்தில் வேதனைப்படுத்தியது காங்கிரஸ்:

பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பெருந்தலைவர் காமராஜர் 1954 முதல் 63ஆம் ஆண்டு வரை அப்பழுக்கற்ற ஆட்சியை செய்தவர் என்று தான் விஜய் சொன்னார். அத்தகைய ஆட்சியை செய்துகொண்டு இருப்பவர், மாண்புமிகு பாரதப்பிரதமர் மோடி ஜி அவர்கள்.

காங்கிரஸ் காமராஜரை தூக்கி எறிந்தது. இறக்கும்போதுவேதனையில் இறந்தவர், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

எப்போது விஜய் அவர்கள் பொதுவெளிக்கு வந்துவிட்டாரா, அவரைப் பற்றி குறை சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். விஜய் பற்றி குறைசொல்லாதீர்கள் என சொல்லமுடியாது.

திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி படிப்படியாக வாக்கு சதவீதம் குறைந்துகொண்டு தான் இருக்கிறது. 36 விழுக்காடு வாக்கு வங்கி வைத்திருந்த திமுக, இப்போது 26 விழுக்காடு வைத்திருக்கிறது.

அதிமுக 20 விழுக்காடு வாக்கு வங்கியுடன் இருக்கிறது. பாஜக தன்னிச்சையாக 11.37 விழுக்காடு வாக்கு வங்கியுடனும், கூட்டணியுடன் 18 விழுக்காடு வாக்கு வங்கியினையும் வைத்திருக்கிறது.

இது 25 விழுக்காடு ஆகும். மேலும் 30 விழுக்காடு ஆகும். தேசிய நீரோட்டத்தில் தேசியத்தை வளர்க்க வேண்டும் என கடுமையாக உழைப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.

உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தேன் - சரத்குமார்

1996ஆம் ஆண்டு, அன்று இருந்த அதிமுகவின் ஆட்சியை எதிர்த்து நான் அரசியலுக்கு வந்தேன். யாருக்கும் அன்று தைரியமும் கிடையாது. திராணியும் கிடையாது. அப்போது நான் விஜய் சொல்ற மாதிரி உச்ச நடிகர் தான். அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்குப் போய் பார்த்தது என்றால், அது சரத் குமாரின் படத்தைத் தான். அந்த சமயத்தில் தான், நான் அரசியலுக்கே வருகிறேன். பெரிய பெரிய வெற்றிகள் கொடுக்கும்போதுதான், நானும் அரசியலுக்கு வருகிறேன். காரணம், மக்கள் சேவைக்காக.

அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்யமுடியாது என பலர் வீட்டில் வந்து பேசினார்கள். கல்லால் அடித்தார்கள். ஆனால், 40 நாட்கள் தொடர்ந்து, தேர்தல் பரப்புரை செய்தேன். நாங்கள் அரசியல் இயக்கம் ஆரம்பித்தபோது, மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். என்னைப் பொறுத்தவரை உழைத்தால் எல்லாம் சாத்தியம்’’ என நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை