Sarathkumar Interview: ‘ராதிகாதான் ஆணிவேர்; என்னோட முன்னாள் மனைவி கூட அப்படி…’ - சரத்குமார் எமோஷனல்!
இன்றும் பல குடும்பங்கள் இணைகின்றன, பிரிகின்றன. முதலில் ராதிகா என்னுடைய நண்பர். அதன் பின்னர் தான் அவர் என்னுடைய மனைவி. அவர் என்னுடைய குடும்பத்தை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினார்.
(1 / 5)
சரத்குமார் கடந்த வருடம் லிட்டல் டாக்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தன்னுடைய மனைவி ராதிகா குறித்தும், முன்னாள் மனைவி சாயா குறித்தும் பேசி இருந்தார்.
அதில் அவர் பேசும் போது, “கல்யாண நாளன்று நான் சரியாகத்தான் வந்தேன். ஆனால் நான் மேடைக்கு, 10, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தேன் என்று ராதிகா சொன்னார். இதையடுத்து, நான் தப்பிக்க முயற்சி செய்திருக்கிறேனோ என்று நினைத்ததாகவெல்லாம், அவர் என்னை கிண்டல் அடித்தார்.
(2 / 5)
இன்றும் பல குடும்பங்கள் இணைகின்றன, பிரிகின்றன. முதலில் ராதிகா என்னுடைய நண்பர். அதன் பின்னர் தான் அவர் என்னுடைய மனைவி. அவர் என்னுடைய குடும்பத்தை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினார்.
குறிப்பாக, நான் என்னுடைய முன்னாள் மனைவியை விட்டு பிரிந்து வந்தாலும், அவரையும் அரவணைத்து, அவருக்கு பிறந்த என்னுடைய குழந்தைகளையும் அரவணைத்து, இந்த குடும்பத்தை சரியான நேர்கோட்டில், ஒன்றாக இருக்கும் படியாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
(3 / 5)
அவர் என்னுடைய முன்னாள் மனைவியை வரலட்சுமியின் அம்மா என்றெல்லாம் பார்த்தது இல்லை. ஆனால் இன்றும் அவர் அவருக்கு மரியாதை கொடுக்கிறார்.
(4 / 5)
இன்னும் சொல்லப்போனால் வரலட்சுமி நடிக்க வேண்டும் என்று சொன்ன பொழுது, என்னுடைய முன்னாள் மனைவி வரலட்சுமியிடம், எதை செய்தாலும் உன்னுடைய அப்பாவிடம் அனுமதி வாங்காமல் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, வரலட்சுமி என்னிடம் வந்தார்.
மற்ற கேலரிக்கள்