நடிகர் விஜய்யை துரத்தும் விடாது கருப்பு.. அவர் வாழ்க்கையில் நான் சொல்வது நிச்சயம் நடக்கும்! அடித்துக் கூறும் நடிகர்
நடிகர் விஜய் என்ன தான் சினிமாவை விட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்திருந்தாலும், சினிமா விடாது கருப்பு போல அவரை பின்தொடர்ந்து வரும் என நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் துணைக் கதாப்பாத்திரமாக பல படங்களில் நடித்துள்ளவர் இ.வி.கணேஷ் பாபு. இவரை திரைப்படங்களைக் காட்டிலும் மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது என்னவோ சீரியல்கள் தான்.
சாப்பாடு சாப்பாடு சாப்பாடு
சில ஆண்டுகளுக்கு முன்பு, சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' சீரியல் தமிழ்நாட்டு மக்களின் முக்கிய பிரைம் டைம் சீரியலாக இருந்தது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியலில் 24 மணி நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடத்து பிரபலமானவர் இவர்.
தனக்கு கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் மூழ்கி, அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறும் இவர் சமீபத்தில் விகடன் பத்திரிகைக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அதில் அவர் சீரியல், சினிமா, அரசியல் குறித்து தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.