தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 நாட்களைக் கடந்தும் 100 கோடியை எட்டாத வேட்டையன்! வேட்டையனையே வேட்டையாடிய ரசிகர்கள்!

10 நாட்களைக் கடந்தும் 100 கோடியை எட்டாத வேட்டையன்! வேட்டையனையே வேட்டையாடிய ரசிகர்கள்!

Oct 21, 2024, 12:09 PM IST

google News
திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்த நிலையிலும், தமிழ்நாட்டில் இந்தத் திரைப்படம் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலைப் பெறவில்லை.
திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்த நிலையிலும், தமிழ்நாட்டில் இந்தத் திரைப்படம் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலைப் பெறவில்லை.

திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்த நிலையிலும், தமிழ்நாட்டில் இந்தத் திரைப்படம் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலைப் பெறவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்து வெளியான ’வேட்டையன்’ திரைப்படம் 11ஆவது நாளில் இந்தியா முழுவதும் ரூ.5 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது.

வேட்டையன் வசூல் எவ்வளவு

வேட்டையன் திரைப்படம் 11ம் நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 99 கோடி ரூபாயும், இந்திய அளவில் 134 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. இந்தப் படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்தும் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாயை வசூலிக்கவில்லை.

வழக்கமாக ரஜினி படம் வெளியான சில நாட்களிலேயே படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை எகிறவிடும். ஆனால், தற்போது படம் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் 100 கோடியே தாண்டாமல் உள்ளதற்கு மிகப் பெரிய காரணமாக இருப்பது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயான போட்டி தான் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வசூல் நிலவரம்

இந்த திரைப்படம் வெளியான அன்றைய தினம் 31.7 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 24 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளில் 26.75 கோடி வசூல் கிடைத்த நிலையில், நான்காம் நாளில் 22.3 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 5ம் நாளான நேற்று முன் தினம் வேட்டையன் திரைப்படம் 5.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

கதையின் கரு என்ன?

கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.

அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.

அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!

வேட்டையன் சொல்லும் நீதி என்ன?

கடந்த படத்தில், பழங்குடி மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த த. செ. ஞானவேல் இந்தப்படத்தில் என்கவுண்டர் சரியா? தவறா?.. தாமதமான நீதியின் பலன்...? நீட் தீர்வால் ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் உள்ளிட்டவற்றை விவாதமாக எடுத்து முன் வைத்திருக்கிறார். படத்தில் என்கவுண்டருக்கு ஆதரவாக ரஜினியும், அதற்கு எதிராக அமிதாப்பும் நடக்கும் வாக்குவாதங்கள் மிக முக்கியமானவை..

குறிப்பாக, "சட்டம் கொடுப்பது நீதியா.. இல்லை தனி நபர் கொடுப்பது நீதியா? ".. " விரைவாக கிடைக்கும் நீதியே சரியான நீதி" .. " துப்பாக்கியை பயன்படுத்தும் போது, போலீஸ் அழுத்த வேண்டியது ட்ரிகரை அல்ல மனசாட்சியை" "குப்பத்து ஆட்களை நம்ப முடியாது என்றால் மாடி வீட்டு ஆட்களை நம்பலாமா?" "போலீசுக்கு முன் தீர்மானங்கள் இருக்கக்கூடாது" "மக்களுக்கு நீதியும், கல்வியும் சமமாக கிடைக்க வேண்டும் " உள்ளிட்ட வசனங்களில் இயக்குனருக்கே உரித்தான டச் இருந்தது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி