தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Parthiban: ‘காதல்-னு ஒன்னு இல்லவே இல்ல…சமாளிச்சு வாழலாம் நினைச்சது என் தப்பு.. மூச்சு முட்ட’ பார்த்திபன்

Actor Parthiban: ‘காதல்-னு ஒன்னு இல்லவே இல்ல…சமாளிச்சு வாழலாம் நினைச்சது என் தப்பு.. மூச்சு முட்ட’ பார்த்திபன்

Jul 09, 2024, 08:11 AM IST

google News
Actor Parthiban: “எங்கெல்லாம் தவறு நடந்தது, அந்த இடங்களையெல்லாம் பார்த்து சரி பண்ண முயற்சி செய்யலாமே என்று நினைக்கிறோம். காதலிப்பது என்பது, அந்த மொமெண்டிற்கு அது மிகச் சரியான விஷயம் தான்.” - பார்த்திபன்
Actor Parthiban: “எங்கெல்லாம் தவறு நடந்தது, அந்த இடங்களையெல்லாம் பார்த்து சரி பண்ண முயற்சி செய்யலாமே என்று நினைக்கிறோம். காதலிப்பது என்பது, அந்த மொமெண்டிற்கு அது மிகச் சரியான விஷயம் தான்.” - பார்த்திபன்

Actor Parthiban: “எங்கெல்லாம் தவறு நடந்தது, அந்த இடங்களையெல்லாம் பார்த்து சரி பண்ண முயற்சி செய்யலாமே என்று நினைக்கிறோம். காதலிப்பது என்பது, அந்த மொமெண்டிற்கு அது மிகச் சரியான விஷயம் தான்.” - பார்த்திபன்

பிரபல நடிகரான பார்த்திபன் தனக்கும், தன்னுடைய முன்னாள் மனைவிக்கும் இடையே நடந்த பிரிவு குறித்து பேசி இருக்கிறார். 

இது குறித்து கலாட்டா சேனலுக்கு அவர் பேசும் போது, “ இந்த கலாச்சாரம் நமக்குள் சில விஷயங்களை தானாகவே புகுத்தி இருக்கிறது. அது, இந்த பிரிவில் இருக்கக்கூடிய வருத்தங்கள், வேதனைகளெல்லாம் நமக்கு எதற்கு?.. அதை அனுசரித்து சமாளித்து, சென்று விடலாமே என்பது மாதிரியான ஒரு பார்வையை நமக்கு கொடுத்திருக்கிறது. 

சமாளித்து வாழ வேண்டாம் 

எங்கெல்லாம் தவறு நடந்தது, அந்த இடங்களையெல்லாம் பார்த்து சரி பண்ண முயற்சி செய்யலாமே என்று நினைக்கிறோம். காதலிப்பது என்பது, அந்த மொமெண்டிற்கு அது மிகச் சரியான விஷயம் தான். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் வெவ்வேறு உலகம் இருக்கிறது. இருவரும் இணைந்து ஒரே கட்டிலில் இணைந்து, சில உருவங்களை உருவாக்குகிறார்கள். அது உடல் சம்பந்தப்பட்டது. 

நம் மனதிற்கு, நம் மீதே ஒரு நாள் கோபம் வரும். நம் மீதே, நமக்கு ஒருநாள் வெறுப்பு வரும். என்னை பொருத்தவரை, காதல் சமூகம், கடவுள் இந்த மூன்றுமே இல்லை. இல்லாத ஒன்றை நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வசதிக்கு அதை வளைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் சந்தோஷமாக இருக்கும் வரை, அது சந்தோஷமாகத்தான் இருக்கும். சந்தோஷமாக இல்லாமல் போகும்பொழுது, நமக்கே மூச்சு முட்ட ஆரம்பித்து விடும். அதிலிருந்து எப்படிடா வெளியே வருவது என்ற எண்ணம் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வலியை நாம் நமக்கு கொடுக்க வேண்டாம். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். 

பிரிவை ஏற்றுக்கொண்டோம் 

எங்களைப் பொறுத்தவரை நாங்கள், அந்தப் பிரிவை ஏற்றுக் கொண்டோம். ஆனால், அந்த பிரிவை எங்களுடைய குழந்தைகள் புரிந்து கொள்வது க்‌ஷ்டமான ஒன்றாக இருந்தது. அந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது, எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். என்னை பொருத்தவரை, காதல் என்பது சுதந்திரம். 

நான் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னை காதலித்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையே அவளுக்கு வேறொருவர் மீது பிரியம் வந்துவிட்டது. நான் அவளிடம் மிகவும் நாகரிகமாக, நீ அவனிடமே சென்று விடு என்று கூறி விட்டேன். அவ்வளவுதான். காதல் என்பது பட்டாம்பூச்சி போல தான் அது மீண்டும் வந்தால் வரட்டும், வராவிட்டாலும் பரவாயில்லை” என்று பேசினார். 

முன்னதாக இந்த பிரிவு குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த  பார்த்திபன் அளித்த பேட்டி!

அதில் அவர் பேசும் போது, “என்னுடைய அம்மா பத்மாவதியின் பிரதிபலிப்புதான், என்னுடைய முக்கால்வாசி என்று சொல்லலாம். என்னுடைய குணங்களில் பலவை அவருடையதுதான். அப்பாவிடம் இருந்து தோரணை, நேரத்திற்கு வருவது உள்ளிட்ட விஷயங்கள் என்னுள் வந்து விட்டன.

சீதா காட்டிய காதல்

சீதாவின் உடைய காதலை பற்றி பேசும் போது, "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அதில் ஒன்று என்னுடைய திருமணமும்.. நான் காதலை முதன் முதலில் அதிகமாக உணர்ந்தது சீதாவிடம் இருந்துதான். அந்த காதல் எப்படி இருந்தது என்றால், நான் மிகவும் சாதாரணமாக ஆளாக இருந்த பொழுது, நீ பெரிய ஆளாக வருவாய்.. முதல் படத்திலேயே நீ வீடு, பங்களா உள்ளிட்டவை வாங்குவாய் என்று ஜோசியம் சொன்னது. அந்த ஜோசியம்தான் அந்த காதல். அது கொடுத்த உத்வேகம், உலகத்தில் எங்கிருந்தும் எனக்கு கிடைத்ததில்லை. அதன் மூலமாக நடந்த எல்லா விஷயங்களுமே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.இந்த நேரத்தில் நான் எதைப் பற்றியும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நினைக்கிறேன்.காரணம், காதலையும் கடந்து விட்டோம். பொய்யையும் கடந்து விட்டோம்.

நான் ஒரு முட்டாள்.

எங்களுக்குள் பிரச்சினை எழுந்த பொழுது, விவாகரத்து எல்லாம் வேண்டாம் என்று, நான் அதனை விரட்டி, விரட்டி எப்படியாவது சமாளித்து வாழ்ந்து விடலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது நான் நினைக்கிறேன் அப்படி எல்லாம் இருக்கவே கூடாது. முதலில் சீதாவை எனக்கு எந்தளவு பிடிக்கும் என்றால், நான் அவரை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது; அவர் பெரிய ஸ்டாராக வர வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பிடிக்கும். அந்தளவு நான் அவரை காதலித்தேன். ஆனால் காலப்போக்கில் அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை. இதனையடுத்து தான் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம்.

கல்யாணம் செய்துகொண்ட பின்னர், அவர் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, எனக்கு அதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. காரணம், இந்த குடும்பம் பிரிந்து விடுமோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அப்போது நான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். இப்போது இருக்கக்கூடிய புரிதல், அப்போது இருந்திருந்தால், அம்மா தாயே, தயவு செய்து சந்தோஷமாக நீ நடிக்கச் செல் என்று கூறி இருப்பேன்.

அவள் வைத்த காதல் தான் உட்சபடச காதல்

என்னுடைய மனைவி என் மீது வைத்த காதல் தான் இந்த உலகத்தின் உச்சபட்ச காதல். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. உடன் இருக்கக்கூடிய அபி என்னுடைய உயிருக்கு சமம். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். நான் என்னுடைய கதையை நான் ரெடி செய்து முதலில் சொல்வது, என்னுடைய குழந்தைகளிடம்தான். காரணம் என்னவென்றால், அதன் மூலமாக நடக்கக்கூடிய நல்லது, கெட்டது அனைத்தும் அவர்களையும் பாதிக்கும். அவர்களுக்கு நான் நிரந்தரமான ஒரு வாழ்க்கையை இப்போது வரை ரெடி செய்து கொடுக்கவில்லை. " என்று பேசினார்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி