Nani: ‘சீரழிந்த அரசியலின் உச்சம்..’ சமந்தாவிற்காக வரிஞ்சு கட்டி மல்லுக்கு நிற்கும் நானி!
Oct 03, 2024, 08:58 AM IST
Nani: நடிகர் நானி, அரசியல்வாதி பெயரை குறிப்பிடாமல் சமந்தா மற்றும் நாக சைதன்யாவுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.
சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மார்க்கெட் போட்ட அமைச்சர் கொண்டா சுரேகாவின் விவகாரம் தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமந்தா, நாக சைதன்யா வாழ்க்கையை கண்மூடித்தனமாக முன்வைத்து தகாத கருத்துக்களை தெரிவித்த சுரேகாவுக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் நானி, அரசியல்வாதி பெயரை குறிப்பிடாமல் சமந்தா மற்றும் நாக சைதன்யாவுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.
நானி காட்டம்
அதில், “ அரசியல்வாதிகள் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. உங்கள் வார்த்தைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கும் போது, உங்கள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பது நாங்கள் செய்யும் முட்டாள்தனம்.
இது நடிகர்கள் அல்லது சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இது எந்த அரசியல் கட்சிக்கும் பொருந்தாது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர், ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவதும் சரி என்று நினைப்பதும் சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் “ என்றார்.
சமந்தா கொடுத்த பதிலடி
இந்த கருத்தை ஹீரோ நாகார்ஜுனா ஏற்கனவே மறுத்துள்ளார். சினிமா பிரபலங்களின் வாழ்க்கையை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த சர்ச்சைக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், " எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண்ணாக இருப்பதற்கும், போராடுவதற்கும் நிறைய தைரியமும், வலிமையும் தேவை. இந்தப் பயணம் என்னை எப்படி மாற்றியது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். தயவு செய்து அதை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அரசியல் சதி இல்லை
இருவரின் தனியுரிமைக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும்படி உங்களை கேட்டு கொள்கிறேன். எனது விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட விஷயம். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்துள்ளது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து அரசியல் விவகாரத்தில் இருந்து எனது பெயரை தூரமாக வைக்க முடியுமா? ஏனென்றால் நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கிறேன். அதை கடைசி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறேன் ’’ என்றார்.
நாக சைதன்யா பதில்
அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நாக சைதன்யாவும் பதிலளித்துள்ளார் . தனது தந்தை ட்விட்டரில் பதிவிட்ட பதிவை ரீட்வீட் செய்துள்ளார். “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம். சக மனிதர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும்.
இதுவரை இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் அபத்தமான கிசுகிசுக்கள் வந்துள்ளன. எனது முந்தைய மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான ஆழ்ந்த மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் அமைதியாக இருந்தேன்.
பொறுப்புள்ள பெண் என்ற முறையில் உங்கள் கருத்துகளை சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். உங்கள் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மீடியா தலைப்புச் செய்திகளுக்காக சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது " என்றார்.
டாபிக்ஸ்