Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை.. தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி - அடுத்த நூறு கோடிக்கு டார்கெட்-actor nani reunited with dussehra director srikanth odela - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை.. தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி - அடுத்த நூறு கோடிக்கு டார்கெட்

Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை.. தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி - அடுத்த நூறு கோடிக்கு டார்கெட்

Marimuthu M HT Tamil
Sep 19, 2024 07:49 PM IST

Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை மற்றும் தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி குறித்து செய்தியைக் காண்போம்.

Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை.. தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி!
Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை.. தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி!

தமிழில் வெப்பம், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், ஆஹா கல்யாணம் ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகர் நானி. தன் தனித்துவமான நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர். அதன்பின் தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான ஷியாம் சிங்க ராய், ஹாய் நானா, தசரா ஆகியப் படங்கள் நானியின் நடிப்பில் நல்ல வரவேற்பினைப் பெற்றன.

இந்நிலையில் தசரா படத்தின்மூலம், நூறுகோடி ரூபாய்க்கும் மேல் வசூலைப் பெற்று தந்த இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இதன்மூலம் வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் 'தசரா' படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை:

குறிப்பாக 'தசரா படத்தினை விட நூறு மடங்கு அதிகமாக பார்வையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் உருவாகும்' என இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் 'நானி ஓடேலா 2' பற்றிய உற்சாகம் அதிகரித்திருக்கிறது.

சமீபத்தில் படமாக்கப்பட்ட பிரத்யேக காணொலி மூலம் திரைக்குப் பின்னால் பணியாற்றிய புகைப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பகிர்ந்து கொண்டார். மேலும் தனித்துவமான மற்றும் அழுத்தமான படைப்பை வழங்குவதற்கான குழுவினரின் உறுதிபாட்டையும் வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பேசுகையில், '' கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி 'தசரா' படத்தின் இறுதிகாட்சி படமாக்கப்படும்போது காட்சி எடுக்கப்பட்ட பின்'கட்' எனச் சொன்னேன். தற்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று மீண்டும் 'ஆக்சன்' எனச் சொன்னேன். ’நானி ஓடேலா 2' படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான பிரத்யேக காணொலியைப் படமாக்கினோம்.‌ இதற்கு இடையில் 48, 470, 400 வினாடிகள் கடந்து விட்டன. ஒவ்வொரு விநாடியும் என்னுடைய அடுத்த படத்திற்கான அர்த்தமுள்ள உழைப்புக்காக செலவிடப்பட்டிருக்கிறது.

எஸ்.எல்.பி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில் நானி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், தசரா படத்தைவிட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ' நானி ஓடேலா 2' திரைப்படம் உருவாகும் என நான் உறுதியளிக்கிறேன்'' என்றார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பைத்தியக்காரத்தனமான அன்பு மீண்டும் கிடைத்தது: நடிகர் நானி

இது தொடர்பாகப் பேசிய நடிகர் நானி, '' இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பைத்தியக்காரத்தனமான அன்பு என் வாழ்க்கையில் மீண்டும் கிடைத்துவிட்டது. இதனைக் கண்டு தரிசிக்கத் தயாராக இருங்கள்'' என்றார்.

இவர்களின் இத்தகைய பேச்சு தனித்துவமான மற்றும் பரபரப்பான கதை அம்சத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த திரைப்படத்தில் இதற்கு முன் ஏற்காத புதிய கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய சினிமா அனுபவத்திற்கு ’நானி ஓடேலா 2' களம் அமைக்கிறது .

எஸ். எல். வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஓடேலா இணைந்திருக்கும் இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.