NAGARJUNA: புது மருமகளுக்காக நாகார்ஜுனா எடுத்த மாற்று முடிவு.. சமந்தாவுக்கு கூட இது எல்லாம் செய்யலையே
NAGARJUNA: நாகார்ஜுனா தனது மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது வருங்கால மருமகள் சோபிதாவுக்கும் அதில் விருப்பம் இல்லையாம்.
NAGARJUNA: தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, நடிகை சமந்தா ரூத் பிரபுவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். 2022 ஆம் ஆண்டு முதல், நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவருவதாக வதந்தி ஒன்று சுற்றி வருகிறது. இருவரும் தங்கள் உறவை இந்த ஆண்டு தொடக்கம் முதல் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளில் அதிகம் முறை கிசுகிசுக்கப்பட்ட நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயம் சமீபத்தில் நடந்து முடிந்தது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் எளிமையான முறையில் இரண்டு வீட்டாருக்கு நெருங்கியவர்கள் மத்தியில் மற்றும் நடந்து முடிந்தது.
திருமணம் எங்கு?
இந்நிலையில் நாகார்ஜுனா தனது மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது வருங்கால மருமகள் சோபிதாவுக்கும் அதில் விருப்பம் இல்லையாம்.
சோபிதாவுக்கும் தனது திருமணத்தை ஜெய்ப்பூரில் நடத்த வேண்டும் என்று ஆசை இருந்து உள்ளது. இதனை தனது வருங்கால மாமனார் நாகார்ஜுனாவிடம் சொல்லி உள்ளார். அவரும் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என சொல்லி திருமணம் செய்யும் இடத்தை மாற்றி உள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் நாகார்ஜுனா, சமந்தாவிற்கு கூட இப்படி எல்லாம் தலை ஆசைத்து இருக்க மாட்டார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
காதல் மலர்ந்தது எப்போது
இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நண்பர்களாக இருந்தனர். அதே நேரத்தில் நாக சைதன்யா சோபிதாவுக்கு தனது புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஒரு ஹோம் டூரை காட்டினார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்கள் ஒரே காரில் ஒன்றாக வெளியேறினர். அப்போது இருந்து நாக சைதன்யா மற்றும் சோபிதாவுக்கு இடையில் காதல் கிசுகிசுக்கள் மெல்ல மெல்ல வதந்திகளாகத் தொடங்கின
லண்டன் விடுமுறை:
கடந்தாண்டு மார்ச் 2023-ல், லண்டன் சென்றிருந்த நாக சைதன்யா, தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட படத்தின் பின்னணியில் சோபிதா காணப்பட்டார். அதன் பிறகு, நாகசைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் இடையே இருக்கும் வதந்தி அலை இன்னும் வேகமாக பரவத் தொடங்கியது.
மிச்செலின் ஸ்டார் செஃப் சுரேந்தர் மோகன் லண்டனில் உள்ள தனது உணவகத்தில் நடிகர் நாகசைதன்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் சோபிதா இருந்தார். அவர் நாக சைதன்யாவுடன் போஸ் கொடுத்தபோது, சோபிதாவை பின்னணியில் கழுகுக் கண்கள் கொண்ட நெட்டிசன்கள் பார்த்து கிசுகிசுத்தனர். இந்த புகைப்படம் பின்னர் சமையல்காரரால் நீக்கப்பட்டது. அதே மாதம், இந்த ஜோடியினர் வேகமான ஃபார்முலா கார்கள் மீதான தங்கள் அன்பு குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ஐரோப்பாவில் சோபிதாவும் நாகசைதன்யாவும்
ஜங்கிள் சஃபாரி முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, சோபிதாவும் சைதன்யாவும் ஐரோப்பாவில் விடுமுறைக்கு புறப்பட்டனர். இருவரும் தங்கள் உறவைப் பற்றி தொடர்ந்து மௌனமாக இருந்தபோது, இந்த கவர்ச்சியான விடுமுறையில் அவர்கள் மதுவை ருசிக்கும் படம் இணையத்தில் கசிந்தது. கையில் ஷாப்பிங் பைகளுடன் தெருக்களில் நடந்து செல்லும் சோபிதா மற்றும் நாகசைதன்யாவின் கிளிப்பும் சமூக ஊடகங்களில் வைரலானது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்