Mohan Sharma: ‘குழந்தை இருக்கும் போதே இன்னொருத்தரோட… அது துரோகம் இல்லையா’ - வெளுத்த மோகன் ஷர்மா!
Mar 14, 2024, 05:56 AM IST
கடந்த பேட்டியில் சொன்னது எல்லாமே உண்மைதான். உண்மை என்று நிரூபிக்க என்னிடம் இப்போது எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது நான் அதை எப்படி நிரூபிப்பேன். நான் சொன்னது அனைத்துமே உண்மைதான். அதில் எனக்கு இப்போதும் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் கிடையாது.
தன்னுடைய முன்னாள் மனைவியான லட்சுமி குறித்தும், அவருடைய மகள் ஐஸ்வர்யா குறித்தும், நடிகர் மோகன் ஷர்மா இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அவர் பேசும் போது, “திரைத்துறையில் நானும் ஒரு பிரபலம், லட்சுமியும் ஒரு பிரபலம். இரண்டு பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு அதனை கடைசி வரை கொண்டு செல்வது என்பது மிக மிக கடினமான ஒன்று.
என்னுடைய வாழ்க்கையில் எங்களுக்கு இடையான கணவன் மனைவி உறவு பத்து வருடங்கள் நீடித்தது. அதன் பின்னர் எங்களால் ஒன்றாக இணைந்து இருக்க முடியவில்லை. இதனையடுத்துதான் நாங்கள் பிரிந்தோம். ஆனால் கடந்த பேட்டியில் நான் பர்சனலாக சில விஷயங்களை மிகவும் ஓப்பனாக பேசி விட்டேன். உண்மையில் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. நான் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யார் மீது தவறு என்பதை விசாரணை கமிஷன் வைத்தெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.
கடந்த பேட்டியில் சொன்னது எல்லாமே உண்மைதான். உண்மை என்று நிரூபிக்க என்னிடம் இப்போது எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது நான் அதை எப்படி நிரூபிப்பேன். நான் சொன்னது அனைத்துமே உண்மைதான். அதில் எனக்கு இப்போதும் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். நான் ஒத்துக் கொண்டேன். அது ஏன் அந்த சமயத்தில் நடந்தது என்று இப்போது என்னால் சொல்ல முடியாது. நான் அன்று என்னுடைய உள் உணர்வை கேட்டு அந்த முடிவை எடுத்தேன்.
நாங்கள் வாழ்ந்த பத்து வருடங்களில் எங்களுடைய உறவானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்தது. ஐஸ்வர்யா என்னிடம் வந்து லட்சுமி அம்மா பிற ஆண்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னபோது, அதனை நீங்கள் தீர விசாரித்தீர்களா என்று கேட்கிறீர்கள். ஆனால் நாங்கள் அப்பொழுதே பிரிந்து விட்டோம்.
ஒரே வீட்டிலேயே வெவ்வேறு அறைகளில் வசித்துக் கொண்டிருந்தோம். அப்படி இருந்த போது அதற்கு மேல் அதனை விசாரிப்பது என்பது தேவையில்லாத விஷயம். இதனையடுத்து தான் நான் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.
ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை உங்களுடைய ரத்தமாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் வேறு ஒரு தொடர்பில் இருப்பது என்பது அந்த குழந்தைக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்னுடைய வாழ்க்கையில் அந்த பத்து வருடங்கள் தேவையில்லாத ஒன்றாக மாறி விட்டது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையில் அது மிகவும் மோசமான பகுதி என்றே கூறுவேன்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்