தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mahat Raghavendra: மாசத்துக்கு ஒரு பொண்ணு... கதைய சொன்னா பல மேட்டர் சென்சார் தான்! வெளிவந்த வீடியோ

Mahat Raghavendra: மாசத்துக்கு ஒரு பொண்ணு... கதைய சொன்னா பல மேட்டர் சென்சார் தான்! வெளிவந்த வீடியோ

Sep 21, 2024, 03:02 PM IST

google News
Mahat Raghavendra: இளைஞர்களை கவரும் வகையில் நடிகர் மகத் காதலே காதலே எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலன வசனங்கள் இளம் தலைமுறை காதலர்களை மையப்படுத்தி அமைந்துள்ளது.
Mahat Raghavendra: இளைஞர்களை கவரும் வகையில் நடிகர் மகத் காதலே காதலே எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலன வசனங்கள் இளம் தலைமுறை காதலர்களை மையப்படுத்தி அமைந்துள்ளது.

Mahat Raghavendra: இளைஞர்களை கவரும் வகையில் நடிகர் மகத் காதலே காதலே எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலன வசனங்கள் இளம் தலைமுறை காதலர்களை மையப்படுத்தி அமைந்துள்ளது.

மங்காத்தா, ஜில்லா படங்களின் மூலம் பிரபலமடைந்த மகத் முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்களின் காதலை பேசும் காதலே காதலே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது அப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் காதல்

காதல் காவியமானது, ஒருவனுக்கு ஒருத்தி, சொல்லாமலே காதல், பார்க்காமலே காதல், ஒரு செடி ஒரு பூ என தமிழ் சினிமா பல வகையான காதல் திரைப்படங்களை வழங்கி வருகிறது. ஆனால், தற்போதுள்ள இயக்குநர்கள், அவர்கள் பார்த்த அவர்களை பாதித்த இளம் தலைமுறை காதல்கள் குறித்து பல திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். உதாரணமாக லவ் டுடே, ரோமியோ போன்ற திரைப்படங்கள் இந்த காலத்து இளைஞர்களின் காதல் உணர்வுகளை பிரதிபலிக்குமாறு உள்ளது. இந்தப் படங்களின் வரிசையில் தற்போது காதலே காதலே திரைப்படமும் இணைந்துள்ளது.

படத்தின் நாயகர்கள்

இத்திரைப்படத்தில் மங்காத்தா, ஜில்லா படங்களின் மூலம் பிரபலமடைந்த மகத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்த ராஜன் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரேம்நாத் இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தத் திரைப்படத்தில் இவர்களுடன் பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீவாரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். வியான் புகழேந்தி பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கான உரிமையை சரிகமா நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழு எடிட்டிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

என்ன சொல்கிறார் இயக்குநர்

இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த டீசரின் முதல் வசனமே, தன் கதையை சொன்னால் பல மேட்டர்கள் சென்சார் செய்ய வேண்டியிருக்கும் என்று மகத் கூறுவதாக உள்ளது. தொடர்ந்து காதலனுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுப்பது, முன்னாள் காதலனின் கார் கண்ணாடியை உடைப்பது போன்ற செயல்களில் ஈடபட்டு அதகளம் செய்கிறார் ஹீரோயின், ஹீரோவோ மாதத்திற்கு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி சுற்றி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இளம் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள், அவர்களின் உளவியல் எவ்வாறு உள்ளது என்பதை காதல், கல்யாணம், சண்டை என பல கோணங்களில் சொல்கிறார் இயக்குநர். அதற்கான முன்னோட்டமாக இந்த டீசரும் அமைந்துள்ளது. 

இந்தக் காட்சிகளை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் இயக்குநர் பிரதீப் ரங்கராஜ் இயக்கி நடித்த லவ் டுடே படத்தைப் போல் இளைஞர்களை கவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. படத்திற்கான பணிகள் இன்னும் முழுவதுமாக முடிந்த உடன் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி