டைவர்ஸ்க்கு ஓகே சொன்ன கணவரை பழிவாங்கத் துடிக்கும் நடிகை.. என்னக் கொடுமை சார் இது!
Oct 20, 2024, 01:54 PM IST
ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தன்னை விவாகரத்து செய்ய சம்மதித்த கணவர் பென் அஃப்லெக்கை பழவாங்க திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ்-க்கு தமிழ் ரசிகர்களும் ஏராளம். இவரை வர்ணித்தும் புகழ்ந்தும் தமிழில் சினிமா பாடல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு இவர் நாடு கடந்து மொழிகளை கடந்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.
விவாகரத்து
தற்போது 55 வயதாகும் ஜெனிபர் லோபஸ், பென் அஃப்லெக் என்பவரை திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதற்கு பென் சம்மதம் தெரிவித்த நிலையில், ஜெனிபர் லோபஸிற்கு மீண்டும் பென்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
இதற்கு பென் அஃப்லெக் மறுப்பு தெரிவித்ததால், அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகை ஜெனிபர் லோபஸ் திட்டம் தீட்டி வருவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
உறுதியாக இருக்கும் கணவர்
இதுகுறித்து டெய்லி மெயில் எனும் நாளிதழில் வெளியான செய்தியில், பென் தன்னை விட்டு பிரிந்து சென்றதை ஜெனிபர் லோபஸால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பென்னிடம் முதலில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து கேட்டிருந்தாலும் பின் அவர் மனதை மாற்றிக் கொண்டார். ஆனால், பென் விவாகரத்து தருவதில் உறுதியாக இருந்தார். பென் எடுத்த இந்த முடிவை தாங்கிக் கொள்ள முடியாத ஜெனிபர் லோபஸ் மதுவுக்கு அடிமையாகி வந்தார்.
பழிவாங்க நினைக்கும் லோபஸ்
இந்நிலையில், தன்னை இப்படி புலம்ப வைத்த பென் அஃப்லெக்கை பழிவாங்க ஜெனிபர் லோபஸ் முடிவு செய்துள்ளதாக அவரின் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தன் இதயத்தை உடைத்த பென்னை பழிவாங்க 2025ம் ஆண்டு ஜெனிபர் தன் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இவர், முழு மூச்சாக தனது பணிகளை சிறப்பாக செய்து பென் அஃப்லெக் முன் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என கூறி வருவதாக அவரது நண்பர்கல் தெரவித்தனர்.
எதிர்பார்ப்பில் இருக்கும் லோபஸ்
மேலும், அன்ஸ்டாப்பபுள் திரைப்படத்தில் நடித்துள்ள ஜெனிபர் லோபஸ், இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற வாய்ப்புள்ளதாக நம்புகிறார். ஜெனிபர் லோபஸிற்கு சரியாக நடிக்க வரவில்லை என கிண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சமயத்தில், அதிலிருந்து அவர் மீண்டெழுந்தார். அதேபோல், காதல் தோல்வி என் வாழ்க்கையை கீழே தள்ளிவிடாது. நான் மீன்டும் சிறந்து விளங்கி அனைவரையும் நிச்சயம் பழி வாங்குவேன் என தொடர்ந்து கூறி வருவதாகவும் கூறுகின்றனர்.
புகழின் உச்சியில் ஜெனிபர் லோபஸ்
அமெரிக்காவின் டெலிவிஷன் சீரிஸான ஸ்கெட்ச் காமெடி-யில் டான்ஸராக தனது கரியரை ஆரம்பித்தவர் ஜெனிபர் லோபஸ். அதில் அவரின் அழகையும் திறமையையும் கண்டு ஒட்டுமொத்த ஹாலிவுட் இவரை திரும்பி பார்க்க வைத்தது. செலினா, அனகோண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து ஹாலிவுட் மட்டுமின்றி பிற நாட்டு ரசிகர்களையும் கவர சேர்க்க ஆரம்பித்தார்.
ரசிகர்கள் வேண்டுகோள்
தொடர்ந்து பல படங்களில் ரசிகர்கள் பலரை கட்டிப்போட்ட ஜெனிபர் இசையிலும் ஆர்வம் உடையவர். இவர் நிறைய ஆல்பங்களையும் பாடி வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜெனிபர் லோபஸ் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரால் திருமண பந்தத்தில் சரியாக இருக்க முடியவில்லை என அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு காரணம், ஜெனிபர் லோபஸ் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்தவர். தற்போது தயாரிப்பாளரான பென் அஃப்லெக்கை விரும்பி திருமணம் செய்து கொண்ட ஜெனிபர் அவரையும் விவாகரத்து செய்ய திட்டமிட்டு, குடிக்கு அடிமையாகியுள்ளார். இதனால், அவரின் கலை வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறகின்றனர்.
டாபிக்ஸ்