திருமணத்துக்கு மறுநாள் ஜெனிபர் லோபஸ் வெளியிட்ட படுக்கையறை புகைப்படம்!
20 ஆண்டுகளாக காதல், ஊடல், பிரிவு என இருந்து வந்த ஹாலிவுட் பிரபலங்கள் ஜெனிபர் லோபஸ் - பென் அப்லெக் திருமணம் லாஸ் வேகாஸில் நடைபெற்றது.

<p>இன்ஸ்டாவில் படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த ஜெனிபர் லோபஸ் </p>
ஹாலிவுட் நடிகை, பாடகியாக இருக்கும் ஜெனிபர் லோபஸ் (52), அவரை விட மூன்று வயது குறைவான பென் அப்லெக் (49) ஆகிய காதலித்து வந்தனர். நீண்ட நாள்களாக காதலித்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்து கொண்டனர். பின்னர் மீண்டும் தங்களது உறவை கடந்த ஆண்டில் புதுப்பித்து மறுபடியும் காதலில் இருந்து வந்தனர்.
ஜெனிபர் லோபாஸ் நன்கு பிரபலமான பிறகு திரையுலகினரால் JLo என்று அழைக்கப்பட்டு வந்தார். இதன்பின்னர் தனது பெயரை ஜெனிபர் அப்லெக் என்றும் மாற்றிக்கொண்டார்.
2002ஆம் ஆண்டிலேயே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டிலேயே இருவரும் பிரிந்தனர். இதன் பிறகு இருவரும் வேறொருவரை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளும் பெற்றேடுத்தனர்.