HT OTT SPL: ‘போல் டான்ஸில்’ கலக்கிய ஜெனிபர் லோபஸ்.. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம்!-ht ott special movie jennifer lopez acted a hollywood film adapted from a true story - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Ott Spl: ‘போல் டான்ஸில்’ கலக்கிய ஜெனிபர் லோபஸ்.. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம்!

HT OTT SPL: ‘போல் டான்ஸில்’ கலக்கிய ஜெனிபர் லோபஸ்.. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம்!

Manigandan K T HT Tamil
Aug 07, 2024 04:02 PM IST

இத்திரைப்படத்தில் கான்ஸ்டன்ஸ் வூ, ஜெனிபர் லோபஸ், ஜூலியா ஸ்டைல்ஸ், லில்லி ரெய்ன்ஹார்ட், கேகே பால்மர், லிஸ்ஸோ மற்றும் கார்டி பி ஆகியோர் நடித்துள்ளனர். இது நியூயார்க் நகர ஸ்ட்ரிப்பர்களின் குழுவினரைப் பற்றியது. ஸ்ட்ரிப்பர்கள் என்றால், மது அருந்தும் கூடங்களில் Pole Dance ஆடி வருவாய் ஈட்டுபவர்கள்.

HT OTT SPL: ‘போல் டான்ஸில்’ கலக்கிய ஜெனிபர் லோபஸ்.. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம்!
HT OTT SPL: ‘போல் டான்ஸில்’ கலக்கிய ஜெனிபர் லோபஸ்.. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம்!

இத்திரைப்படத்தில் கான்ஸ்டன்ஸ் வூ, ஜெனிபர் லோபஸ், ஜூலியா ஸ்டைல்ஸ், லில்லி ரெய்ன்ஹார்ட், கேகே பால்மர், லிஸ்ஸோ மற்றும் கார்டி பி ஆகியோர் நடித்துள்ளனர். இது நியூயார்க் நகர ஸ்ட்ரிப்பர்களின் குழுவினரைப் பற்றியது. ஸ்ட்ரிப்பர்கள் என்றால், மது அருந்தும் கூடங்களில் Pole Dance ஆடி வருவாய் ஈட்டுபவர்கள் எனலாம்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது

இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரிப்பர்கள் தங்கள் கிளப்புக்கு வரும் பங்கு வர்த்தகர்கள் மற்றும் CEO களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தைத் திருடத் தொடங்குகிறார்கள். பலரிடம் ஆட்டையைப் போடும் இவர்கள் போலீஸிடம் சிக்கினார்களா, ஏன் இந்த குற்றத்தை செய்யத் தொடங்கினார்கள் என்பது தான் மொத்த படமும்.

நமக்கு பரிட்சயமான முகம் என்றால் அது ஜெனிபர் லோபஸ் தான். அவர் படம் தொடங்கியதும் கவர்ச்சியாக Pole Dance ஆடி அனைவரையும் கவர்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ரமோனா. அவரை டெஸ்டினி. இவர்கள் இருவருக்கும் பார்த்தவுடன் ஒருவர் மீது மற்றொருவருக்கு அன்பு வருகிறது. இருவரும் இணைந்து மதுபானக் கூடங்களுக்கு வருபவர்களுக்கு முன் நடனமாடி பணம் ஈட்டுகிறார்கள்.

வேலை இழப்பு

ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டுக்கு பொருளாதார நெருக்கடி வரும் வேளையில், இவர்களின் வேலைக்கு பாதிப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து சில இடங்களில் வேலை சேர முயற்சிக்கின்றனர்.

அதன் பிறகு கொஞ்ச காலம் கழித்தே இந்த குற்றத்தை செய்யத் தொடங்குகிறார்கள். தங்களுடன் இன்னும் சிலரையும் இணைத்துக் கொண்டு இந்தக் குழுவை வழிநடத்துகிறார் ரமோனா.

படம் முழுவதும் விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு கஸ்டமர், போதையில் மயங்கி விழுவதும் அவரை மருத்துவமனையில் சேர்க்கும் காட்சியும் சிரிப்பை வரவழைப்பதுடன் பதட்டத்தையும் கூட்டுகிறது.

இந்தப் படத்தை Lorene Scafaria என்ற பெண் இயக்குநர் இயக்கியிருப்பதால் பெண்களின் உலகத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். Pole dance ஆடினாலும் அந்தப் பெண்கள் அந்தத் தொழிலுக்கு வர நேரிட்டது ஏன் என்பதையும் குடும்ப சூழ்நிலையும் படத்தில் காட்சிப் படுத்தியுள்ளார்.

2019ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இத்திரைப்படம் வெளியானது.

நியூயோரிகன் புரொடக்ஷன்ஸ் மூலம் ஜெனிபர் லோபஸ், ஜெசிகா எல்பாம், வில் ஃபெரெல் மற்றும் ஆடம் மெக்கே ஆகியோருடன் அவர்களின் குளோரியா சான்செஸ் பேனர் மூலம் தயாரிப்பாளராகவும் இருந்தார்.

இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, குறிப்பாக ஜெனிபர் லோபஸின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது - இதற்காக அவர் கோல்டன் குளோப், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது விழாக்களில் பரிந்துரைகளைப் பெற்றார். இந்தப் படம் 20.7 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் $157.6 மில்லியனை வசூலித்தது.

இந்தப் படம் lionsgate play ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. OTT Play செயலியிலும் பார்க்கலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.