தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vetrimaran: கோலிவுட்டிற்கு அடுத்த ஜாக்பாட்.. வெற்றிமாறனுடன் கூட்டு சேர்ந்த ஐசரி கணேஷ்.. - முழு விபரம் உள்ளே!

Vetrimaran: கோலிவுட்டிற்கு அடுத்த ஜாக்பாட்.. வெற்றிமாறனுடன் கூட்டு சேர்ந்த ஐசரி கணேஷ்.. - முழு விபரம் உள்ளே!

May 04, 2024, 05:20 PM IST

வெற்றிமாறனுக்கு இயற்கை விவசாயத்தின் மேல் தீராத காதல் உண்டு. உத்திரமேரூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்.
வெற்றிமாறனுக்கு இயற்கை விவசாயத்தின் மேல் தீராத காதல் உண்டு. உத்திரமேரூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்.

வெற்றிமாறனுக்கு இயற்கை விவசாயத்தின் மேல் தீராத காதல் உண்டு. உத்திரமேரூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்.

 

ட்ரெண்டிங் செய்திகள்

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

HBD Pasupathy: கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவர்! சென்னை மண்ணின் மைந்தன், தமிழ் சினிமாவின் மகா கலைஞன் பசுபதி

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பன்னாட்டு திரை பண்பாட்டு மையம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு, இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியை வழங்குகிறது

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும், பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதன்படி B.Sc Film Studies (3 Years) , M.Sc. Film and culture studies (2 years), PG Diploma in Media skills (1 year) ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும், சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று (03.05.2024) கையெழுத்தானது. 

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்குவதே, பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நோக்கமாகும். 

இதன் நிறுவனத்தலைவர் இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், "தன்னை மேம்படுத்திய இந்தச் சமூகத்திற்கு தான் ஆற்ற வேண்டிய கடமை இது; எனவே இந்த மையத்தை நடத்துவதில் பெருமை கொள்கிறேன்” என்றார். 

மேலும் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து B.Sc,M.Sc, Diplomo ஆகிய பாடப்பிரிவுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு செயல்முறைக்கல்வியுடன் ஏட்டுக்கல்வியும் கிடைக்கிறது. இதனால் அவர்கள் எளிதாக திரைத்துறையில் வெற்றி நடை போடலாம்” என்றார். 

வேல்ஸ் பல்கலைகழகம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் கல்வி பயில வழிவகை செய்யும் வகையில், வி-சாட் என்னும் தகுதித்தேர்வை நடத்தி, அதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கிவருகிறது. 

அதேபோல இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், நலிந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் ஃபெப்சி உள்ளிட்ட அமைப்புகளில் இருக்கும் ஏழை தொழிலாளர்களுக்கும், பொருளாதார உதவிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் இலவசமாக கல்வி பயில தேவையான உதவிகள் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. 

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பின்வருமாறு கூறினார். அவர் பேசும் போது, “ தமிழ் சினிமாவிற்கும் இந்திய சினிமாவுக்கும், உலக அளவில் பெருமை சேர்ந்து வரும் தேசிய விருது நாயகன் இயக்குநர் வெற்றிமாறன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

கடலூரில் பிறந்து, திரைப்படக் கனவுகளுடன் சென்னை வந்து, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பயின்று, இன்று பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் அருமை நண்பர் இயக்குநர் வெற்றிமாறன். 

இவருடைய விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை அனைவரும் அறிந்த விஷயம்; பலருக்கும் தெரியாத விஷயம் என் நண்பரைப் பத்தி சில இங்கு நான் சொல்கிறேன். 

வெற்றிமாறனுக்கு இயற்கை விவசாயத்தின் மேல் தீராத காதல் உண்டு. உத்திரமேரூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார். அதேபோல் மருத்துவ உதவியையும், கல்வி உதவியையும் யார் சென்று கேட்டாலும் செய்து கொடுக்கிறார். அவர் உதவிசெய்யும் குணம் கொண்டவர். இதையெல்லாம் பொதுவெளியில் சொல்லிக்கொள்ளவும் மாட்டார்.

அத்துடன், தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், திரைத்துறையில் நுழைவதே குதிரைக்கொம்பு. 

அந்த மாதிரியான மாணவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பன்னாட்டு திரைப் பண்பாட்டு மையம் இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

இதில் திறமையுள்ள மாணவர்கள் சேர்ந்து இலவசமாக பயிலலாம். நாங்கள் இருவரும் இனி வரும் காலங்களில் சேர்ந்து, இத்தகைய கல்விச்சேவையை அளிப்போம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி