தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உலக அழகிக்கே இப்படி ஒரு நிலையா? பாலிவுட்டை வட்டமடிக்கும் வதந்தி.. முடிவே இல்லாமல் செல்லும் பஞ்சாயத்து

உலக அழகிக்கே இப்படி ஒரு நிலையா? பாலிவுட்டை வட்டமடிக்கும் வதந்தி.. முடிவே இல்லாமல் செல்லும் பஞ்சாயத்து

Oct 14, 2024, 09:55 PM IST

google News
நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சானை விட்டு விலக இன்னொரு நடிகை தான் காரணம் என பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சானை விட்டு விலக இன்னொரு நடிகை தான் காரணம் என பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சானை விட்டு விலக இன்னொரு நடிகை தான் காரணம் என பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரிய உள்ளதாக பல ஆண்டுகளாக தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கணவர் அபிஷேக் பச்சனை பிரிந்து சில காலம் அவரது தாயார் வீட்டில் மகள் ஆராத்யாவுடன் வாழ்ந்து வந்தார். அதற்கு காரணம், பாலிவுட் நடிகை ஒருவருடன் அபிஷேக் பச்சனுக்கு ஏற்பட்ட பழக்கம் தான் என்றும், இது இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கியதால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனின் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் தற்போது தீயாய் தகவல்கள் பரவி வருகின்றன.

உலக அழகி

உலக அழகி பட்டம் வென்று இந்தியா முழுவதும் உள்ள மக்களின் மனதில் தனது பெயரை பச்சைக் குத்தி வைத்துள்ளவர் ஐஸ்வர்யா ராய். இவர், உலக அழகி பட்டம் வென்ற பின், தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, எம்ஜிஆர் குறித்து தமிழில் வெளியான இருவர் திரைப்படத்தில் நடத்ததின் மூலம் நடிகையாகவும் தனது கெரியரைத் தொடங்கினார்.

அவர் தமிழ் மொழியைக் காட்டிலும் இந்தியில் அதிக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி பாலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகையாக மாறினார். அவரிடம் புகழ் உள்ள அளவு, அவரை சுற்றிய சர்ச்சைகளும் அதிகம்.

பரவும் வதந்தி

சினிமா துறையில் பெண் ஒருவர் சாதித்தாலே அவரைச் சுற்றி பல வதந்திகள் பரவும் நிலையில், புகழின் உச்சத்தில் இருந்தால் அவை இன்னும் கூடுதலாகத் தானே இருக்கும். இவரை பாலிவுட்டில் பல நடிகர்களுடன் இணைத்துப் பேசி வதந்திகள் வந்த நிலையில், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உண்டு.

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து

இந்நிலையில், சந்தோஷமாக இருவரும் வாழ்க்கையை கொண்டு சென்று வரும் வேளையில், சிலர் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இவர்கள் இருவரும் விரைவில் பிரியப் போகின்றனர் என வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

அதுமட்டுமா? ஐஸ்வர்யா ராய் தனது திருமண மோதிரத்தை அணியவில்லை, அவரது மாமியாரான ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயை அடக்கி வைத்துள்ளார் என ஏராளமானவற்றை கூறி வருகின்றனர்.

அபிஷேக் பச்சன் விளக்கம்

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இருவரும் இணைந்து குடும்ப உறவை நகர்த்திச் சென்று வரும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என அபிஷேக் பச்சனே விளக்கமளித்துள்ளார்.

ஆனாலும், அம்பானி இல்லத் திருமண விழாவிற்கு ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தனியாக வந்தது பல விவாதங்களை எழுப்பியது. இந்த நிலையில், அபிஷேக் பச்சனின் தந்தையும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராயைப் பற்றி பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அமிதாப் பச்சனின் பேட்டி

அதில், ஐஸ்வர்யா, அவரது மகள் ஆராத்யா பிறந்த போது, சுமார் 3 மணி நேரம் பிரசவ லலியைத் தாங்கினார். இதற்காக அவர் எந்த வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, அவர் எக்காரணம் கொண்டும் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாபர். ஐஸ்வர்யாவின் இந்த மன உறுதியை பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது எனக் கூறியிருந்தார். இதனால், ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமிதாப் பச்சன்.

தனியாக சென்ற ஐஸ்வர்யா

முன்னதாக பாலிவுட் வட்டாரத்தில் பலரும் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே மோதல் முற்றியதாகவும் இதனால், ஐஸ்வர்யா ராய் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருவதாகவும் பலரும் தெரிவித்தனர். அத்துடன், மகளின் நலனிற்காகவே, இத்தனை நாள் ஐஸ்வர்யை பொறுமையாக இருந்தார் எனவும் இனி அவர் அதற்கெல்லாம் பொறுத்துக்கொள்ள போவதில்லை எனவும் கூறிவிட்டு விரைவில் அபிஷேக் பச்சானை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அவர்கள் வதந்தியை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது அபிஷேக் பச்சனுக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதாக தகவல் பரப்பி வருகின்றனர். இதனால், உலக அழகிக்கே இந்த நிலையா? அவரை விட்டு போக யாருக்காவது மனம் வருமா என ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை