Aishwarya Rai: மகள் குறித்த கேள்வி.. கடுப்பான ஐஸ்வர்யா ராய்.. விருது விழாவிலும் விடாத வதந்திகள்!-actress aishwarya rai angry reply for press in iifa awards - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Rai: மகள் குறித்த கேள்வி.. கடுப்பான ஐஸ்வர்யா ராய்.. விருது விழாவிலும் விடாத வதந்திகள்!

Aishwarya Rai: மகள் குறித்த கேள்வி.. கடுப்பான ஐஸ்வர்யா ராய்.. விருது விழாவிலும் விடாத வதந்திகள்!

Malavica Natarajan HT Tamil
Sep 29, 2024 12:48 PM IST

Aishwarya Rai: IIFA விருது வழங்கும் விழாவில் செய்தியாளர் ஒருவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர் ஒருவர், அவரது மகள் ஆராத்யா குறித்து கேள்வி எழுப்பியதற்கு மிகவும் கோபமடைந்துள்ளார்.

Aishwarya Rai: மகள் குறித்த கேள்வி.. விருது விழாவில் கடுப்பான ஐஸ்வர்யா ராய்!
Aishwarya Rai: மகள் குறித்த கேள்வி.. விருது விழாவில் கடுப்பான ஐஸ்வர்யா ராய்!

இயக்குநர் மணிரத்னம், நடிகை சமந்தா, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, மற்றும் வெங்கடேஷ் டகுபதி போன்ற நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பாலிவுட் சினிமாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், அனன்யா பாண்டே, கிருதி சனோன், கரண் ஜோஹர், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு விருது

இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராய். மேலும், இயக்குநர் மணிரத்னம் சிறந்த இயக்குநராகவும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹாமான் சிறந்த இசையமைப்பாளராகவும் ஜெயராம் சிறந்த துணை நடிகராகவும் பொன்னியின் செல்வன் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோபமூட்டிய செய்தியாளர்

விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராய் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செய்தியாளர் ஒருவர், நீங்கள் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது உங்கள் மகள் ஆராத்யாவை அழைத்து வருகிறீர்களே அதற்கான காரணம் என்ன ? எனக் கேட்டுள்ளார்.

இவரின் இந்தக் கேள்வியால் கோபமடைந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். பின் நிதானித்து பதிலளித்த அவர், ஏனெனில் அவர் என் மகள். அதனால் அவர் என்னுடன் தான் இருப்பார் என கோபத்துடனே பதிலளித்துள்ளார்.

பரவும் வதந்திகள்

பாலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். அவரிடம் புகழ் உள்ள அளவு, அவரை சுற்றிய சர்ச்சைகளும் அதிகம்.

சினிமா துறையில் பெண் ஒருவர் சாதித்தாலே அவரைச் சுற்றி பல வதந்திகள் பரவும் நிலையில், புகழின் உச்சத்தில் இருந்தால் அவை இன்னும் கூடுதலாகத் தானே இருக்கும்.

இவரை பாலிவுட்டில் பல நடிகர்களுடன் இணைத்துப் பேசி வதந்திகள் வந்த நிலையில், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உண்டு.

இந்நிலையில், சந்தோஷமாக இருவரும் வாழ்க்கையை கொண்டு சென்று வரும் வேளையில், சிலர் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இவர்கள் இருவரும் விரைவில் பிரியப் போகின்றனர் என வதந்திகளைப் பரப்பினர். அதற்குத் தகுந்தாற்போல, சில நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் தனித்தனியே பங்கேற்று வந்தனர். பின், இந்த சர்ச்சை தற்போது சிறிதளவு அடங்கிய நிலையில், ஐஸ்வர்யா ராய் அவளது மகளை அழைத்து செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுவே, ஐல்வர்யா ராய் செய்தியாளரிடம் கோபமடைந்ததற்கான காரணமாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படத் சினிமா கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட IIFA உத்சவம் இன்று தனது இறுதி நாள் கொண்டாட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.