கூண்டில் ஏற்றப்பட்ட அபிராமி.. கார்த்திக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Oct 11, 2024, 05:35 PM IST
கூண்டில் ஏற்றப்பட்ட அபிராமி.. கார்த்திக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்ப்போம்.
கூண்டில் ஏற்றப்பட்ட அபிராமி குறித்தும், கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்தும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய எபிசோட்:
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் அபிராமியை வெளியே எடுக்க முயற்சி செய்ய இது வரதட்சணை கேஸ் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கின்றனர். அதன் பிறகு வக்கீலை வைத்துப் பேச அப்போதும் இது ரொம்ப சீரியசான கேஸ், எங்களால் எதுவும் பண்ண முடியாது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கோங்க என ஷாக் கொடுக்கின்றனர்.
அருண் - கார்த்தியின் உரையாடல்:
அப்படியும் இல்லனா கேஸ் கொடுத்தவர்களை வாபஸ் வாங்க வையுங்க என்று சொல்ல அருண், ’வா கார்த்திக் பார்த்துக்கலாம்’ என்று கிளம்பிச் செல்கிறான். அதன் பிறகு ராஜேஸ்வரியை சந்தித்துப் பேச, ’அவள் என் பொண்ணை உள்ள தள்ளிட்டு நீங்க மட்டும் எப்படி நல்லா இருக்கலாம்’ என்று பேச கார்த்திக் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.
இதைத்தொடர்ந்து அடுத்த நாள் கோர்ட் கூட அபிராமியை கூண்டில் ஏற்றி அவள் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோட்:
ஒரு நாள் நான் தீபா இல்ல, கீதா என்ற உண்மையை கீதா உடைக்க, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தாள். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா எல்லோரிடமும் மன்னிப்புக்கேட்க அனைவரும் ரவுண்ட் கட்டி ஐஸ்வர்யாவை திட்டினர்.
ஒரு கட்டத்தில் அருண், ஐஸ்வர்யாவை அறைந்து ’உன்னையும் என்னையும் சேர்த்து வைத்தது தீபாதான்; அப்படி இருக்கும்போது அவளுக்கே இப்படி உன்னால துரோகம் பண்ண முடிந்தது’ என ஆவேசப்பட்டான். அபிராமி ’இவளை போலீஸ்ல புடிச்சு கொடு தூக்குல போடட்டும் என ஆவேசப்பட, கார்த்திக் ஏற்கனவே சரவணனுக்கு தகவல் கொடுத்துவிட்டேன்’ என்று கூறினான் .
இந்த சீரியலில், அருண் - ஐஸ்வர்யா மீது இருக்கும் கோபத்தில் அவளது துணிமணிகளை கொளுத்தினார்.
அதாவது, அருண் இனிமே ஐஸ்வர்யாவோடு வாழ முடியாது.. அவளுக்கு இனி இந்த வீட்டில் இடமும் இல்லை என்று ஆவேசப்படுகிறான். மேலும் இவ்வளவு நாளாக, ’இந்த விஷ பூச்சியோட சேர்ந்து வாழ்ந்தேனு சொல்லும் போது, எனக்கே அருவருப்பா இருக்கு’ என்றும் கோபப்படுகிறான்
தர்மலிங்கம், ஜானகி என எல்லோரும் ஐஸ்வர்யா செய்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசுகின்றனர். அதனைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் அருண் என இருவரும் வெளியே கிளம்ப, அப்போது ராஜேஸ்வரி அவர்களை வழி மறிக்கிறாள்.
அவள், ’’ஐஸ்வர்யா என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் அவளை ஜெயிலுக்கு அனுப்பியது எல்லாம் சரியே இல்லை’’ என்று சொல்ல, அருணுக்கும், ராஜேஸ்வரிக்கும் வாக்குவாதம் உருவாகிறது. பிறகு ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவை சந்திக்க ஸ்டேஷனுக்கு வருகிறாள். ஐஸ்வர்யாவை சந்தித்து அவள் ஆறுதல் சொல்ல, ’’என்னை ஜெயிலுக்கு அனுப்பிய அந்த கார்த்திக்கை சும்மா விடக்கூடாது , பழி வாங்கியே ஆக வேண்டும்’’ என்று ஆவேசப்படுகிறாள்.
டாபிக்ஸ்