வேட்டையன் முதல் நாள் காட்சி..ஒரே திரையரங்கில் பார்த்து ரசித்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படத்தை நடிகர் தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஒரே திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர். இதுதொடர்பான விடியோக்கள் வைரலாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படமான வேட்டையன் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் வேட்டையன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன், படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த படத்தின் முதல் நாள் காட்சியை ரசிகர்களை போல் பல்வேறு பிரபலங்களும் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் ஒரே தியேட்டரில் வைத்து வேட்டையன் படத்தை பார்த்துள்ளனர்.
ஒரே திரையரங்கில் வேட்டையன் படம் பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா
இதுததொடர்பாக சன் நியூஸ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விடியோவில், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி சில்வர் ஸ்கிரீனில் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வேட்டையன் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.